பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 荔莎 வயதாக ஆக மூளை கொழுந்து விடுகிறது போலிருக்கு இவ மகளுக்காவது கல்யாணமாவது! எங்கேயும் கேட்டிராத அதிசயமா இருக்குதே இவ. ஆசை 1 என்று கெண்டை பண்ணிஞர்கள், பருவம் மெருகு தீட்டித் தீட்டி அருமையான பொம்மை போல் அழகு ஊட்டி அற்புதமாக வளரச் செய்தது ராஜத்தை. அந்த இளங்கொடியை, மோவாத அரும்பை, பற்றி அணைத்து நுகரத் துடித்த பெரிய மனிதர்களுக்கு நீலா வதியின் ஆசை விபரீத புத்தியாகவும், சித்தக் கோளாருக வும் தான் தோன்றியது. பண்ணையார் சிவகுருநாத பிள்ளைக்கு அது முட்டாள் தனம்ாக, அசட்டுத்தனமாக, பைத்தியக்காரத்தனமாகப் பட்டது: "நல்லாருக்கு உன் புத்தி போற ப்ோக்கு எங்கேயாவது கேள்விப்பட்டது உண்டா! மக முரண்டினலும் தாய் தன் குல முறை ஆசாரம் கெடாமல் கோயிலுக்குத் தொண்டு செய்து ஊராருக்கு நல்லவளாகப் பேரெடுக்க வற்புறுத்து வதைக் கண்டிருக்கோம், கேட்டிருக்கோம். இவ என்ன டான்ஞ தன் மகளுக்குக் கல்யாணம் செய்து குடித்தனம் பண்ணப் போருளாமே, ஹே' என்று சிரித்தார். அப்படிச் சொல்லாதீங்க. தாயைப் போலவே மகளும் ஆகணும்னு எல்லாரும் மனசாறவா நினைக்கப் போருங்க. அப்படி என்ன உயர்ந்த வாழ்வு இது...பணமும் பவிசும் வரு துண்ணு சொல்லலாம். எல்லாம் சேர்ந்தப்புறம் வழி வழி வாரு வம்மிச விருத்தியா. இதே மாதிரி இருக்கணும்னு சொன்ன அது சரின்னு எனக்குப் படலே, கேட்டதில்லைங்கிறீ களே. கோவலன் ஆசை நாயகியாகி வாழ்ந்த தாசி மாதவி தன் மக மணிமேகலையை தாசித் தொழில் நடத்தவா தூண் டிஞ? இல்லை கேட்கிறேன்! என்று ஒரு போடு போட்டாள் நீலாவதி.