பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பண்ணைப் பிள்ளைவாள் CBMMMASAMMAAAS SAAAAA வாழ்வில் ஒருமனிதனே வந்தடைவன எவ்வளவே. இருக் கலாம். அவற்றில் எல்லாம் தனிச் சிறப்புடையது ஒரு மனி தனுக்குக் கிடைக்கிற பெயர் விநோதம்தான் என்று எனக்குப் படுகிறது. அவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று பெய ரெடுப்பதைப் பற்றிச் சொல்வதாக நினைத்துவிடப்போகிறீர் கள் அதில்லை. பிள்ளே பிறந்து வளரு முன்பே பெற்ருேர்கள் "காப்பிட்டு'ச் சூட்டுகிற பெயர் இருக்கிறதே அதன் கிளை கண்ாத்தான் குறிப்பிடுகிறேன். பண்ணேயார், பண்ணையார் என்று நான் சொல்லிவந்த சிவகுருதாத பிள்ளையின் பெயரை விளக்கிளுலே போதும். குழந்தை பிறந்து நல்ல நாள் பார்த்து, ஊரார் உறவினர்களை அழைத்து காப்பிட்டு, வெல்லப் பாகிலே விரவி எடுத்த காப் பிடு விசேஷ அரிசியை வழங்கி, இனிக்கும் வாயால் இட்ட பெயர் சிவகுருநாதன் என்பதுதான். இருந்தாலும்கூட, தாத்தாவினுல் டேலே சின்னப் பயலே என்றும், தந்தை யால் அடே குரு' எனவும், பள்ளிக்கூடத்தில் 'சிவகுரு" என் றும், தாயினுல் செல்லையா என்று செல்லமாகவும், ஊராரி குல் பெரிய வீட்டுத் தம்பி என்றும்-இன்னும் எப்படி எப் படியெல்லாமோ!-அழைக்கப்பட்டு பண்ணையார் என்று சிறப்புப் பெயருமேற்ற பிள்ளைவாளுக்குத் தனிப் பெயர் வேறு வந்து சேர்ந்தது. "நம்ம பண்ணப் பிள்ளைவாளா! என்று பொதுவாக ஆண்கள் பேசிக்கொண்டாலும், ஊர்ப் பெண்களிடையே