பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 103 எண்படு தனத்தி னோர்க்கே விலைமகள் கூற்ற மாவள் திண்கொடு மிடியர் தம்மைத் தெரிவையர் நினைத்த லுண்டோ? சே! அவளை அக்கிரமமாகத் துஷிக்காதே; இதனால் எனக்கு யாதொரு துன்பமும் வராமல் இருப்பதற்கு என்னுடைய ஏழ்மைத் தனமே ஒரு பாதுகாப்பல்லவா? பணத்தாசை உள்ள தாஸி ஏழையை ஏன் விரும்புவாள்? தவிர கற்பிற்கு அரசியாகிய என் மனைவி கோகிலத்திற்கு நான் துரோகம் செய்ய நினைப் பேனோ என்னுடன் நீ இவ்வளவு காலம் பழகியும் என் மனோ உறுதியையும், நான் எவ்வித நடத்தை உடையவன் என்பதை யும், அறிந்து கொள்ளவில்லையே! அவள் ஏதோ நம் மீதுள்ள அன்பினால் நம்மைக் காண விரும்புகிறாள். நாம் அதைத் தடுப்பது தருமமாமோ? அவள் எதற்காக வருகிறாளோ அதைப் பற்றி நாம் இப்பொழுது எவ்விதம் ஊகிக்க முடியும்? ஸோமே ; அவள் வைர ஸ்ரத்தைப் பெற்றதோடு திருப்தி அடைந்ததாய்க் காணப்படவில்லை. மேலும் ஏதாவது அப கரிக்கலாம் என்னும் எண்ணத்துடன் வருவதாகத் தோன்று கிறது! நான் சொல்வதைக் கேளுங்கள். பிறகு துன்பப்பட நேரும். (தனபாலன் ஒரு பக்கமாய் வருகிறான்) (தனக்குள்) இதோ மாதவராயர் இருக்கிறார்; நேரில் அவரிடம் போக வெட்கமாக இருக்கிறது. ஒருவித அச்சமும் என்னை வதைக்கிறது. அதோ அந்த ஸோமேசனும் இருக்கி றான். மெதுவாகச் சைகை செய்து அவனை கூப்பிடுகிறேன். (ஒரு மண் சட்டியை எடுத்து ஸோமேசன் பேரின் மெதுவாக எறி கிறான்) லோமே : (திடுக்கிட்டு மேலே பார்த்து/ ஆகா யார் என் பேரில் கல்லைப் போட்டது? மாத மதிளின் மீது இருக்கும் புறாக்கள் தம் விளையாட டில் தள்ளி விட்டிருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/105&oldid=887317" இலிருந்து மீள்விக்கப்பட்டது