பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 105 எந்தப் பள்ளிக் கூடத்திலும் கற்காமல் அந்த வித்தை மாத்திரம் சுலபமாகவே வந்து விட்டது. ஆச்சரியந்தான். அது இருக் கட்டும் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்குப் பதில் சொல்லும். இந்த மாமரம் எந்தக் காலத்தில் புஷ்பிக்கும்? அதாவது தெரியுமா? ஸோமே : என்ன என்னைப் பரீட்சிக்கிறாயோ? ஆனி ஆடி மாசங்களில் புஷ்பிக்கும். இது தெரியாதா முட்டாள் தன அந்தப் பெயர் உமக்குத்தான் நன்றாய்ப் பொருந்து கிறது. அப்பா சாஸ்திரி வீட்டில் பிறந்து குப்பா சாஸ்திரி வீட்டில் வாழ்க்கைப்பட்ட எனக்கு லவணம் என்றால் எருமைச் சாணம் என்று தெரியாதோ? என்று அழுத்தம் திருத்தமாய் ஒருத்தி சொல்லிக் கொண்டு இலையில் பரிமாறினாளாம். அதைப் போல் இருக் கிறது நீர் சொல்வது. ஸோமே : அதென்ன அப்படிச் சொல்கிறாய்! நான் சொன் னது ஒருநாளும் தவறாது! நீ இவ்விடத்திலேயே இரு. இதோ எஜமானரிடம் போய்க் கேட்டுக் கொண்டு வருகிறேன். (மாதவ ராயரிடம் போய்/ ஸ்வாமி! மாமரம் எந்தக் காலத்தில் புஷ்பிக் கும்? தயவு செய்து தெரிவியுங்கள். மாத அது எதற்காக இப்பொழுது? வசந்த காலத்தில் புஷ் பிக்கும். ஸோமே : (திரும்பி வந்து, அடே அது வசந்த காலத்தில் புஷ்பிக்கும். மாத அப்படியானால் நீர் சமர்த்தர்தான் உள்ளே போய் எஜமானரிடங் கேட்டு அறிந்து கொண்டு வந்து சொன்னால், இது உமக்கு முன்னமேயே தெரிந்ததாய் விட்டதோ? நீர் சொன் னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைதான். இந்தப் பிரவேசப் பரிட்சை யில் நீர் தவறிப் போனிர். இன்னொரு கேள்வி கேட்கிறேன். அதற்காவது நீரே பதில் சொல்லும் பார்க்கலாம். தனம் நிறைந்த பட்டினத்தைப் பாதுகாப்பவர் யார்? ஸோமே : (அலட்சியமாக) மகா பெரிய கேள்வியோ இது? அரசன் பாதுகாக்கிறான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/107&oldid=887320" இலிருந்து மீள்விக்கப்பட்டது