பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 109 தோழி : என்ன அப்படிச் சோதனை செய்து பார்க்கிறீரே! இதற்கு முன்னால் இவற்றைப் பார்த்திருக்கிறீரோ? ஸோமே ; இதென்ன ஆச்சரியம்! தட்டானுடைய திறமை நம் கண்களை ஏமாற்றி விட்டதே! தோழி: இல்லையில்லை; உம்முடைய கண்ணின் பார்வை தான் சற்றுக் குறைவாகத் தோன்றுகிறது. இதற்குமுன் நீர் பார்த்த ஆபரணங்களே இவைகள்! ஸோமே (மாதவராயரிடம் எடுத்துக் கொண்டு போய்) ஆகா! நண்பரே! நம்மிடத்தில் இருந்து திருட்டுப் போன ஆபரணங்களைப் பார்த்தீர்களா? மாத ஆகா! அப்படியா சந்தோஷம்! அதுவும் நமது நல்ல காலந்தான் இவைகள் எவ்விதம் இவர்களிடம் வந்திருக்கக் கூடும்? ஸோமே! (தோழியிடம்இரகசியமாக உண்மையில் அப்படித் தானா? - தோழி (இரகசியமாக) உண்மையில் அவைகளே! ஸோமே ; நிச்சயந்தானா? தோழி : சத்தியமாய் அவைகளே! ஸோமே : (சந்தோஷத்துடன் ஸ்வாமி சந்தேகமே இல்லை. மாத ஸ்கி உன் வாயால் சொல். இது நிஜந்தானா? தோழி : நிஜமே! - மாத (சந்தோஷத்துடன், ஆகா! நல்ல சங்கதி தெரிவித் தாய் என்னிடத்தில் எவர் சந்தோஷ சங்கதியைத் தெரிவிக்கிறார் களோ, அவரை நான் வெறுங்கையுடன் அனுப்புவதே இல்லை. இதோ இந்த வைர மோதிரத்தை எடுத்துக் கொள். (தன் விரலில் மோதிரம் இருப்பதாய் நினைத்து, இழுக்கப் பார்க்கிறார். இல்லை என்றறிந்து வெட்கமடைகிறார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/111&oldid=887328" இலிருந்து மீள்விக்கப்பட்டது