பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 115 ரிடத்திலும், பெண்பாலரிடத்தும், குழந்தைகளிடத்தினும், ஈசுவர னுடைய் அம்சமாகிய ஜீவாத்மாவே இருக்கின்றது. நமக்கு மாயையால் வெவ்வேறாகத் தோன்றினும் ஆத்மாக்கள் எல் லாம் ஒன்றே. இந்த உண்மையை அறிந்து எல்லாரையும் சமமாக மதித்து யாவரிடத்தும் தயையோடும் அன்போடும் நடந்து கொள்பவர்களே அந்தணர். அந்தணர் என்பது குளிர்ந்த அழகிய தன்மை உடையவர்களுக்குக் காரணப் பெயர். ஆதலால் அவர் கள் கீழ் வகுப்பிலுள்ள பிறரைத் தம் வழிகளில் திருப்பி, புலால் மறுத்தல், கற்றல் முதலிய நல்லொழுக்கங்களில் பயிற்றிக் காலக் கிரமத்தில் அவர்களைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளக் கடவர்கள் என்பது பற்றி, அவர்கள் மற்ற மூன்று வருணத்தார் களிடத்திலும் மணம் புரிந்து கொள்ளலாம் என்று ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆகையால் நான் குலத்தின் உயர்வு தாழ்வைப் பற்றி நினைக்கவே இல்லை. நான் ஏற்கெனவே ஒருத்தியை மணந்த கிரகஸ்தன் என்பது உனக்குத் தெரியாதென்று நினைக்கிறேன். சகல உத்தம குணங்களும் நிறைந்த மனைவியிருக்க, இந்தக் காரியத்தைச் செய்து அவள் மனதிற்கு ஆறாத் துயரைத் தருவது தருமமாகுமா? இதை நீயே யோசனை செய்து பார். வஸ (மிக வருந்தி) என் பிராண நாதா தாங்கள் என்னை இப்படிச் சோதனை செய்தால், பேதையாகிய நான் என்ன செய்யக் கூடும்? ஒரே புருஷனை நினைத்து மணக்க வேண்டும் என்பது ஸ்திரீகளுக்கு மாத்திரமே ஒழியப் புருஷர்கள் ஒரு மனைவி உயிருடன் இருக்கையிலேயே, மற்றவரை முறைப்படி மணந்து கொள்ளலாம் அல்லவோ ஒரு ஸ்திரீ தன் கணவன் இருக்கும் பொழுது வேறொருவனை மணத்தல் முடியாது. இந்த விஷயத் தில் ஸ்திரீ புருஷர்களுக்கு வித்தியாசம் உண்டு. ஆகையால், என்னை ஏற்றுக் கொள்வது சாஸ்திரத்திற்கும் விரோதம் ஆகாது. என்னை அலட்சியம் செய்து மறுத்து விட்டால், நான் இந்த உயிரைச் சுமந்து வருந்தி வாழ வேண்டும். தங்களையே நினைத்து நினைத்து தங்கள் பொருட்டாகவே உயிரை விட்டு விடுவதே உறுதி. ஆகா! தாங்கள் மறுக்க மறுக்க, என் மனம் படும் பாட்டை என்னவென்று விவரிப்பேன் என் உயிர் இப்பொழுதே போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/117&oldid=887340" இலிருந்து மீள்விக்கப்பட்டது