பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் விடும் போல் இருக்கிறது என் ஆருயிர் நாதா! உன் இச்சைப் படி ஆகட்டும் என்று தங்கள் இனிய வாயால் ஒரு மொழி கூறி என்னை இந்த இடர்க் கடலில் இருந்து கை தூக்கி விடக் கூடாதா? ஏழையின் முகத்தைப் பாருங்கள். பிரபு தங்களையே எண்ணி எண்ணிப் புண்ணான என் மனதை ஏற்றுக் கொண் டேன் என்னும் அந்த மொழி அமுதைச் சொரிந்து உய்விக்கக் கூடாதா? இதோ தங்களை ஆயிரம் தடவை சேவித்து வணங்கு கிறேன். - மாத: ஹா. ஈசுவரா கருணாநிதி! இதுவும் உன்சோதனையோ? கற்பிற்கு அரசியாகிய என் பிராண சுந்தரியின் மனதை வருத்த நினைப்பேனோ? இவள் படும் பாட்டைக் காண என் மனம் தத்தளிக்கிறதே என்ன செய்வேன்: ஹா. ஜெகதீசா (மூர்ச்சித்து விழுகிறார்) - வஸ் : (துடிதுடித்து, ஐயோ! என்ன சம்பவித்ததோ தெரிய வில்லையே என் துரை மூர்ச்சித்து விழுந்து விட்டாரே! ஒய் ஸோமேசரே அடி தோழி! சீக்கிரம் வாருங்கள் (கையைப் பிசைந்து கொண்டு சீக்கிரம் வாருங்கள் நமது எஜமானர் மயங்கி விழுந்து விட்டார். (யாவரும் ஓடி வருகிறார்கள்) இடம் : மாதவராயருடைய மாளிகை. காலம் மறுநாள் காலை. /வளந்தவேனை ஒரு சயனத்தில் நித்திரை செய்யத் தோழி அருகில் நிற்கிறாள்.) தோழி : அம்மா பொழுது விடிந்து நெடுநேரமாய் விட் டதே! விழித்துக் கொண்டு பாருங்கள். வஸ் (கண்ணைத் துடைத்துக் கொண்டு விழிக்கிறாள்) ஆகா! இப்பொழுது தானே சயனித்துக் கொண்டேன். இதற்குள் பொழுது விடிந்து இவ்வளவு நேரமாகி விட்டதே என்ன வெட்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/118&oldid=887342" இலிருந்து மீள்விக்கப்பட்டது