பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 . வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் தோழி : அந்தரங்கமான இடத்தில் மாத்திரம் அல்ல: ஒவ் வொருவருடைய ஹிருதயத்திற்குள்ளும் நுழைந்து விட்டீர்கள்! வஸ்: இல்லை, இல்லை. இவரைச் சேர்ந்தவர்கள் என் பேரில் கோபம் கொண்டிருப்பார்களோ என்னமோ தெரியவில்லை! தோழி: அவர்களுக்கு இனிமேலேதான் ஒரு வேளை வருத் தம் உண்டாகும். - வஸ் ஏன்? தோழி : நீங்கள் புறப்பட்டுப் போவதினால். வஸ் , ஆகா! அப்படியா மற்றவர்களும் என்னை அவ்வளவு விரும்புகிறார்களா அதுவும் ஒரு பாக்கியந்தான். அவருடைய மனைவியாகிய உத்தமி என்னை இரவில் பார்த்த பொழுது, என்னிடத்தில் அன்பான முகத்தைக் காட்டி எனக்கு எவ்வளவு உபசாரம் செய்தார்கள். புருஷனுக்குத் தகுந்த மனைவியே! நற் குணமே நிறைந்த இவர்களை விட்டுப் பிரிந்து போக சகிக்க வில்லை. அடிஸ்கி! இதோ இந்த வைர லர்த்தை எடுத்துக் கொண்டு போய் என்னுடைய அரிய சகோதரியாகிய கோகிலத்தினிடம் சேர்ப்பித்து, நான் மாதவராயருடைய பணிப் பெண் என்றும், கோகிலத்தின் அடிமை என்றும் தெரிவித்து, இந்த மாலை எந்தக் கழுத்திற்கு உரியதோ அதை இந்த ஸ்ரத்தால் அலங்கரித்துக் கொள்ள நான் வேண்டியதாய்க் கேட்டுக் கொள். தோழி நமது எஜமானருக்கு இது திருப்தியாய் இராதே. வஸ் அவர் என்மீது ஒருகாலும் வருத்தப்பட மாட்டார். நான் சொல்வதைச் சொல். . தோழி ஆக்ஞை (போய்த் திரும்பி வருகிறாள்) தோழி: அம்மணி ஸ்ரத்தை வாங்கிக் கொள்ளவே மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள். தான் தன் கணவனையும் கற்பை யுமே ஆபரணங்களாக மதிப்பதாகவும், இதைப் பற்றிச் சிறிதும் கவலைப் படவில்லை என்றும் சொல்லித் தடுத்தார்கள் நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/120&oldid=887348" இலிருந்து மீள்விக்கப்பட்டது