பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் பத்ம (தனக்குள்) என்ன என்னுடைய முட்டாள்தனம்! எஜமான் அவசரமாகப் பூஞ்சோலைக்கு வண்டியைக் கொண்டு வரச் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தேன். வெற்றிலை புகையிலை எல்லாம் எடுத்துக் கொண்டு வர மறந்து விட்டேன். வாய்க்கு ஒன்றும் இல்லாமல் பித்துப் பிடித்த மாதிரி இருக் கிறது. கொஞ்சதூரத்தில் ஒரு கடைஇருந்ததைப் பார்த்தேன். இதோ மாதவராயருடைய மாளிகை இருக்கிறது. இதன் வாசலில் வண்டியை நிறுத்தி விட்டுக் கடைக்குப் போய் வருகிறேன். (வண்டியை மாதவராயர் விட்டு வாசலின் நிறுத்தி விட்டுப் போகிறான். அந்த சமயத்தின் வளிவந்தளேயனையும் கோமளாவும் அதற்கு அருகின் வருகிறார்கள்./ கோம அம்மா! இதோ வண்டி தயாராக நிற்கிறது, ஏறிக் கொள்ளுங்கள். (வண்டியின் கதவைத் திறக்கிறாள்) வஸ் : (ஏறிக் கொண்டு) சரி! நீ உள்ளே ப்ோ; நான் கதவை மூடிக் கொள்கிறேன். நகைகளைக் கொடுத்ததைப் பற்றி என் னுடைய சகோதரி கோபித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள். அடி தோழி! நீ நம்முடைய வீட்டிற்குப் போய், நான் கூடிய சீக்கிரம் வருவதாகச் சொல். கோம சரி உத்தரவுப்படி செய்கிறேன். கதவை மூடிக் கொள்ளுங்கள். (வளிவந்தளேயனை கதவை மூடிக் கொள்ள, கோமளா விட்டிற்குள் போப் விடுகிறாள்.) (பத்மநாபன் திரும்பி வருகிறான்) (தனக்குள்) அப்பா இந்த வெற்றிலை போடா விட்டால் என் பாடு ஆபத்தாய் விடுகிறது! நான் கடைக்குப் போனதினால் கால தாமஸ்மாய் விட்டது. எஜமான் கோபித்துக் கொண்டு அடிக்க வருவான்; வேகமாய் ஒட்டலாம். (வண்டியில் ஏறிக் கொள்கிறான்) (அந்த சமயத்தில் ஒருவன் அடியில் வருமாறு பறை சாற்று கிறான்) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/124&oldid=887355" இலிருந்து மீள்விக்கப்பட்டது