பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 127 டும். பீமசேனனைப் போல என் கைகளால் முஷ்டி யுத்தம் செய் கிறேன். (சந்தானகன் வண்டிக்குள் எட்டிப் பார்க்கிறான்) பிரதா (கைகூப்பி மெதுவான குரலில், ஐயோ! அபயம்! காப்பாற்ற வேண்டும் இப்பொழுது என்னுடைய உயிர் உம் முடைய கையில் இருக்கிறது. சந்தா : பயப்பட வேண்டாம் அபயம் என்றவரை அவசி யம் காப்பாற்ற வேண்டியது நமது கடமை அல்லவா! (தனக் குள்) புறாவானது இராஜாளிப் பட்சியினிடத்தில் தப்பித்து வேட னுடைய வலையில் விழுந்ததைப் போல இவன் இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டான். நல்ல வேளையாக வீரகன் என்னைப் பார்க்கத் தூண்டினான். இதுவும் தெய்வச் செயல்தான். (கதவை மூடி விட்டு விரகனிடம் வந்து வீரகா நான் பிரதாபனை - இல்லை - வஸந்தஸேனையைப் பார்த்தேன். வண்டிக்காரன் சொன்னது உண்மைதான். மாதவராயர் காத்திருப்பார்; வண் டியைத் தாமசப்படுத்தாமல் ஒட்டிக் கொண்டு போகட்டும். வீர சந்தானகா கோபித்துக் கொள்ளாதே; நீ சொல்லிய விதத்தில் இருந்து எனக்கு ஒருவித சந்தேகம் உதிக்கிறது. சந்தா என்ன சந்தேகம்? - வீர வண்டியில் இருந்து நீ திரும்பிய போது உன் முகம் மாறுபட்டது. தவிர, முதலில் நீ பிரதாபன் என்றாய்; பிறகு அதை வஸந்தஸேனை என்று மாற்றினாய். நீ இதைச் சொன்ன பொழுது உன்னுடைய குரல் தடுமாறியது. சந்தா நன்றாய் இருக்கிறது! அதற்காகத்தான் நீயே போக வேண்டுமென்று முதலிலேயே சொன்னேன்! நாம் பிரதாபனைத் தேடுகிறபடியால் அவன் அகப்படவில்லை என்று சொல்ல ஆரம்பித்தேன்; இதில் சந்தேகமென்ன? பெட்டி வண்டிக்குள் தனியாய் இருந்த ஸ்திரீயை நான் பார்த்ததைப் பற்றி அவள் என்னைக் கடிந்து கொண்டாள். அதனால் என் முகம் மாறுபட் டிருக்கலாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/129&oldid=887365" இலிருந்து மீள்விக்கப்பட்டது