பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் ஒன்றுதான் நம்மிடம் எப்பொழுதும் ஒரே விதமான அபிமானத் துடன் இருக்கிறது. தனவந்தன், ஏழை என்னும் பேதமில்லாமல் இது எப்பொழுதும் குளிர்ந்த நிழலையும், பழங்களையும், இன் பத்தையும் கொடுக்கிறது. மாத உண்மைதான்; பகுத்தறிவைப் பெற்ற மனிதனைக் காட்டிலும், அதைப் பெறாத மரஞ்செடி கொடிகளே மேலா னவை; அதைப் பற்றி சந்தேகமென்ன? (ரகுவம்ச சுதா என்ற கீர்த்தனையின் மெட்டு) கதனகுதுகலம் - ஆதி ஸோமே : ப. பலவாய்க்கூடின பறவை யாடின! மலர்வாய் வண்டினம் மோகனம் பாடின மாத அ. குழலோ நாதமே குயிலின் கீதமே! மழலை மொழியால் அஞ்சுகம் கொஞ்சின. ஸோமே செவிக்கோர் பெரும் விருந்தே யிது. உவப்பெயர் தினேனே ஒகோவின்பமே! 1 DfI35 : பாவம் போக்கிடும் இடமே இது, தவம் புரிந்தோமோ யாமிங்கேகவே! ஸோமே ; அதோ கல்மேடை இருக்கிறது. அதில் கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளுங்கள். நேற்றிரவு எல்லாம் உங்களுடைய தேகம் அஸெளக்கியமாய் இருந்தது அல்லவா? ஆகையால் உட் கார்ந்து சிரம பரிகாரம் செய்து கொள்ளுங்கள். ஆகா அந்த வஸந்தஸேனையின் குணமே குணம் தங்கள் பொருட்டு அவள் எவ்வளவு பாடுபட்டாள். இரவு முழுதும் அவளுக்கு நித்திரையே இல்லையே! மாத . (முகம் மாறுகிறது) நாம் காலையில் இங்கு வருவ தற்குப் புறப்பட்ட பொழுது அவள் அலுத்து நித்திரை செய்து கொண்டிருந்தாள். அவளை எழுப்பாமலும் அவளிடம் சொல்லிக் கொள்ளாமலும் வந்து விட்டேன். அவள் எழுந்திருந்து என்னைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/132&oldid=887372" இலிருந்து மீள்விக்கப்பட்டது