பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் - | 3 | பற்றி எவ்விதமான எண்ணம் கொள்வாளோ தெரியவில்லை. விருந்தாக நமது மாளிகைக்கு வந்திருக்கும் அவளை நாம் அலட் சியம் செய்து வந்து விட்டோம் என்று நினைப்பாளோ? கூடிய சீக்கிரம் வந்து விடுவதாயும், அதற்குமுன் அவள் போக வேண்டு மென்றால், அவளை நமது பெட்டி வண்டியில் வைத்து இவ் விடம் அழைத்து வரும்படியாகவும் சொல்லி விட்டு வந்தேன். நேரமாகிறது நாம் வீட்டிற்குப் போகலாம். அவள் ஒருவேளை நமது வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள். ஸோமே ; அதோ பார்த்தீர்களா? நமது பெட்டி வண்டி வருவதை? மாத ஆம்! ஆம்! அவளே இங்கு வந்து விட்டாள். வந்த தற்குப் பலனாக இந்த உத்தியானவனத்தைப் பார்த்துக் கொஞ்ச நேரம் சுகமாய் இருந்து விட்டுப் போகட்டும். (தனக்குள் இவ ளுடைய எண்ணம் நிறைவேறப் போகிறதில்லை. நான் என்ன செய்வேன்? பதிவிரதா சிரோன்மணியாகிய என் மனைவி கோகிலத்தின் மனத்தில் விசனம் உண்டானால் அதனால் நான் நாசமடைந்து விடுவேனல்லவா? ஆனால், இந்தப் பெண்மணி என் பொருட்டு அரசனையும் அலட்சியம் செய்து வெறுத்து, ஒரே மனதாய் என்னையே காதலித்திருப்பதை நான் எப்படி மாற்றுவேன்? இருக்கட்டும்; எவ்விதமாயினும் முயன்று இவள் மனதை மாற்ற முயன்று பார்க்கிறேன். (குணசீலன் வண்டி யுடன் வருகிறான்/ ஸோமே ; அடே குணசீலா வண்டியில் யார் வந்திருக் கிறார்கள்? குண வஸந்தஸேனை அம்மாள். ஸோமே (வண்டியின் அருகில் சென்று நேரமானதால் நீங்கள் வரவில்லையென்று நினைத்து நாங்களே வீட்டிற்கு வர நினைத்தோம்; நல்ல வேளையாய் சமயத்தில் வந்து சேர்ந்தாய். குண ஸ்வாமி மன்னிக்க வேண்டும். வண்டிக்கு அடியில் போடும் மெத்தையைப் போட மறந்து வந்து விட்டேன். பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/133&oldid=887374" இலிருந்து மீள்விக்கப்பட்டது