பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 133 மாத ஒகோ! நீ தானோ பிரதாபன் போதும் போதும்; சங்கதிகள் எல்லாம் எங்களுக்குத் தெரியும். போகட்டும்; எப்படியாவது நீ உயிர் தப்பி வந்தாயே; அதுவே போதும். உனது விதியே நட்பாயிருந்து உன்னை இங்கு கொண்டு வந்தது. பிரதா நான் சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடி வந் தேன். என்னைப் பலர் துரத்தி வந்தனர். கடைசியாக தங்கள் மாளிகைக் கதவின் மறைவில் ஒளிந்து கொண்டேன். இந்தப் பெட்டி வண்டி வந்தது. அதில் வந்து ஏறிக் கொண்டேன். குண இந்த சங்கிலியின் ஒசையை வஸந்தஸேனையின் ஆபரணங்களின் ஒசையென்று நினைத்து ஒட்டிக் கொண்டு வந்து விட்டேன் முட்டாளாகிய நான். மாத குணசீலா கவலைப்படாதே! நீ செய்தது பெருத்த உபகாரம்; கடவுளே இவ்விதமாக நடக்கும்படி சூழ்ச்சி செய் திருக்கிறார். நல்லது; இவரை இதிலேயே உட்கார வைத்து இவர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவா. /பிரதாபன் பேரில் இருந்த சங்கிலியை விலக்கி நீக்குகிறார்) பிரதா , ஆகா! ஸ்வாமி! தங்களுடைய குணத்தைப் புகழாத வர்களே இல்லை. அதை நான் இப்பொழுதே நேரில் காண்கி றேன். நீங்கள் விலக்கிய சங்கிலியைக் காட்டிலும் அதிக வலி யுடையதும் எப்பொழுதும் நீடித்து நிற்கக் கூடியதுமான வேறு ஒரு சங்கிலியால் என் மனதைக் கட்டி விட்டீர்கள். இந்த உத வியை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். (வண்டிக்குள் உட் காருகிறான், உத்தரவு பெற்றுக் கொள்ளுகிறேன். மாத சரி சுகமாய்ப் போகலாம்; அடே குணசீலா அரசனு டைய காவலர் வந்தாலும் வரலாம். சீக்கிரமாக ஒட்டிக் கொண்டு போ. - - /குணசீலன் வண்டியை ஒட்டிக் கொண்டு போகிறான்) மாத நாம் இப்பொழுது செய்த காரியம் அரசனுக்குத் தெரிந்தால், நம்மை உடனே சிரச்சேதம் செய்து விடுவான். அந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/135&oldid=887378" இலிருந்து மீள்விக்கப்பட்டது