பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் சங்கிலியைக் கிணற்றில் போட்டு விடுவோம். நேரமாகிறது. வஸந்தஸேனை நம்முடைய மாளிகையிலேயே இருப்பாள். நாம் சீக்கிரம் போய் அவளை வீட்டிற்கு அனுப்புவோம்; வா போகலாம். (போப் விடுகிறார்கள்/ இடம் : உத்தியான வனத்திற்குச் சமீபத்தில் இருந்த அரசனுடைய சோலை. மகிபாலன் காஷாயம் பெற்றுச் சந்நியாசியாக வருகிறான். காலம் மேற்படி காலை. மகி (தனக்குள்) பண் செஞ்சுருட்டி - ஆதி 1. தலையே! நீ வணங்காய் தலை-மாலை தலைக்கணிந்து தலையாலே பலிதேருந் தலைவனைத் தலையேநீ வணங்காய் (த) 2. கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோள் வீசிநின் றாடும்பிரான்றன்னைக் (கண்) 3. செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவளம் எரிடோல் மேனிப்பிரான் றிறமெப்ப்ோதும் (செ) 4. வாயே வாழ்த்து கண்டாய்-மத யானை யுரிபோர்த்துப் பேய் வாழ் காட்டகத்தாடும் பிரான்றன்னை (வா) 5. கைகால் கூப்பித் தொழிர் கடிமாமலர் தூவிநின்று பைவாய் பாம்பரை யாத்தபரமனைக் (கை) 6. நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சாடும்மாலை மங்கை மணாளனை (நெ). 7. தேடிக்கண்டு கொண்டேன் திருமாலொடு நான் முகனுந் தேடித் தேடொனாத் தேவனை யென்னுள்ளே (தே) நான் சந்நியாசியான பிறகு என் மனக் கவலை எவ்வளவு குறைந்து விட்டது! தெரியாமலாயாரும் இந்த நிலைமையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/136&oldid=887382" இலிருந்து மீள்விக்கப்பட்டது