பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 135 புகழுகிறார்கள். புதியதாய்க் காவியில் நனைந்த இந்த வஸ்திரம் மிக பளுவாக இருக்கிறது. இந்தச் சோலையில் ஒரு நீரோடை இருக்கிறது. அதில் இதை நனைத்துக் கசக்கிவிட்டால் பிறகு இலேசாக இருக்கும். இந்தச் சோலை மனத்திற்கு எவ்வளவு இரமணியமாக இருக்கிறது. ஆகையினாலே தான் இராஜாவின் மைத்துனன் வீரசேனன் இதிலேயே எப்பொழுதும் குடியாக இருக்கிறான். அவனுக்குச் சந்நியாசி என்றால் மிகவும் கோபம் உண்டாவது வழக்கம்; உடனே கத்தியால் அவனுடைய மூக்கை அறுத்து விடுவான். நான் நீரோடையில் வஸ்திரத்தை கசக்கிக் கொண்டு அவன் கண்ணில் படாமல் அப்பால் போய் விடுகி றேன். (சற்று துரம் போகிறான்) /விரசேனன் உருவி வாளுடன், தன் தோழன் சேவகன் முதலியோருடன் வருகிறான்) வீர (மகிபாவனை நோக்கி) அடேதுஷ்டா நில்லடா! எங்கே போகிறாய்? இதை விட்டு நகர்ந்தால் முள்ளங்கியின் இலையை ஒடிப்பதைப் போல, உன் தலையை முறித்து எறிவேன். தோழன் வேண்டாம்; வேண்டாம். சந்நியாசியை வருத்து வது பெருத்த பாவம். இருக்க இடம் அற்றவர்களுக்கு நிழலைத் தர மரங்களையும், இங்கு வருபவர்களுக்கு இன்பந்தர வேண் டும் என்னும் எண்ணத்துடன் இந்தச் சோலையையும் ஏற்படுத் திய நீங்கள் இப்படிச் செய்வது அடாது. வேண்டாம், ஏழையை ஏன் ஹிம்சிக்க வேண்டும். பாவம். மகி ஐயா! இந்த நகரத்திற்கே நீர் இரrகன். யாதொரு புகழும் இல்லாத இந்த ஏழைச் சந்நியாசியின் பேரில் கோபிக்க வேண்டாம். வீர இந்த போக்கிரி என்னை வைவதைக் கேட்டாயா! தோழ பலே! உங்களுக்கு நல்ல காது. மதுரைக்கு வழி ஏதென்றால் குதிரைக்குச் சுழி நன்றாயில்லை என்பதைப் போல் இருக்கிறதே. இவன் தன்னை மன்னிக்கும்படி அல்லவோ உங்களை நயந்து வேண்டிக் கொள்ளுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/137&oldid=887384" இலிருந்து மீள்விக்கப்பட்டது