பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 139 வஸ் : (தனக்குள்) இதென்ன மோசமாய் இருக்கிறதே! இங்கே அந்தப் பாதகன் வீரசேனன் அல்லவோ இருக்கிறான்! எவ்விடத்திலும் என் துரதிருஷ்டம் முன்னால் வந்து நிற்கிறதே! இவனால் என்ன துன்பம் சம்பவிக்குமோ தெரியவில்லையே! ஈசுவரா என்ன செய்வேன்? தோழ (உள்ளே பார்த்து இதென்ன அதிசயம்? புலிக் கூண்டிற்குள் இந்த மான் எப்படி வந்தது? பேடன்னம் தன் அழகிய ஜோடியை விடுத்துக் காக்கையை நாடி இங்கு வந்ததோ? இது என் மனத்திற்கு நன்றாகத் தோன்றவில்லையே இலாபத் தின் பேரிலேயே கண்ணுங் கருத்துமாய் உள்ள, உன் தாயின் உபத்திரவத்தைப் பொறுக்க முடியாமல் அருவருப்புடன் வந் தாயோ? பிறரிடத்தில் வெறுப்பைக் கொண்டிருந்தாலும் உங்கள் ஜாதி வழக்கம் அதை வெளியில் காட்டுகிறது இல்லை. அப்படியே நீயும் செய்யத் துணிந்தாயே? வஸ ஐயா! என்னைப் பற்றி அப்படி நினைக்க வேண் டாம். என் தாய் மூலமாக இவர் எவ்வளவோ ஐசுவரியத்தைத் தருவதாய்ச் சொல்லி அனுப்பி எவ்வளவோ முயன்றும் அதற்கு நான் சிறிதும் இணங்கவில்லை. வண்டி தவறி இதில் ஏறி விட் டேன் போல் இருக்கிறது! அதனால் இந்தப் பெரும் பிழை நேர்ந்தது. நீர்தான் இந்த சமயத்தில் எனக்கு உதவி செய்து என்னைக் காப்பாற்ற வேண்டும். ஐயா! உமக்கு அநேக கோடி நமஸ்காரம். மிகவும் புண்ணியமுண்டு. தோழ பயப்பட வேண்டாம்; நான் பார்த்துக் கொள்ளுகி றேன். ஒரு நொடியில் இந்த மடையனை நான் ஏமாற்றி விடுகி றேன், (விரசேனனிடம் வந்து/ ஆம்! இதில் உண்மையில் ஒரு பெரும் பேய் தானிருக்கிறது! அப்பாடா! எவ்வளவு பயங்கர மாய் இருக்கிறது! வீர இருக்கட்டும். அது பேயாய் இருந்தால் உன்னை விழுங்காமல் எப்படி விட்டது? - தோழ ! உங்களை விட்ட மாதிரி என்னையும் விட்டது. அது எப்படியாவது போகட்டும். இங்கே இருந்து நம்முடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/141&oldid=887393" இலிருந்து மீள்விக்கப்பட்டது