பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14() வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் அரண்மனை வரையில் இரு பக்கங்களிலும் குளிர்ந்த நிழலைத் தரும் மரங்களைக் கொண்ட பாட்டை இருக்கிறது; நாம் சுகமாக நடந்து போகலாம் வாருங்கள். வீர ஏன் நடக்க வேண்டும். தோழ நடந்தால் நமக்கும் தேக ஆரோக்கியம்; களைத்துப் போன எருதுகளுக்கும் ஒருவித ஆறுதல். வீர ஆனால் அப்படியே செய்வோம்! பத்மநாபா வண் டியைப் பின்னால் ஒட்டிக் கொண்டுவா (சற்று நடக்கிறான்) சே! நில்! நான் ஒரு நாளும் நடந்ததே கிடையாதே. இன்று ஏன் நடப்பேன்? நான் யார் தெரியுமா? நான் இராஜாவின் மைத்து னன் அல்லவா? ஏழையைப் போல நான் பாட்டையின் வழியாக நடப்பதா? சீ. அது அவமானம். ஜனங்கள் என்னைப் பற்றி என்ன சொல்லிக் கொள்வார்கள். நான் வண்டியிலே தான் வர வேண்டும். தோழ (தனக்குள்) இந்த ஆபத்துக்கு என்ன செய்கிறது; மார்க்கம் ஒன்றும் தோன்றவில்லையே! இருக்கட்டும் ஒன்று செய்யலாம். (பலமாக) நான் விளையாட்டுக்குச் சொன்னேன். நீங்கள் அதை இப்படித்தானா நம்புகிறது? நீங்களாவது நடப்ப தாவது தங்களை நடக்கச் சொல்ல யார் துணிவார்கள்? வண்டி யில் இருப்பது பேயல்ல. வஸந்தஸேனை தங்களைப் பார்க்க வந்திருக்கிறாள். அந்த சந்தோஷத்தினால் வேடிக்கையாக ஒரு பொய் சொன்னேன். - வீர : அப்படியா பலே! இன்றைக்கு எனக்கு நல்ல வேட்டை தான் அன்றைக்கு ஒடினவள் இப்பொழுது தானாக வந்திருக்கி றாள். பார்த்தாயா என்னுடைய சாமர்த்தியத்தை? நான் அனு மானைப் போல எவ்வளவு அழகாயிருக்கிறேன் பார்? தோழ சந்தேகம் என்ன! உங்கள் புத்திக்கு நீங்களே இணை ஏன், உங்கள் அழகுக்கு அனுமானே இணை! - வீர அதனாலேதான் இணையே இல்லாத இந்தத் தேவ ரம்பை என்னை நாடி வந்திருக்கிறாள். நான் அன்று இவளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/142&oldid=887395" இலிருந்து மீள்விக்கப்பட்டது