பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 141 அதிருப்தியாக நடந்து கொண்டேன். அதைப் பற்றி இவளுக்கு மனதில் வருத்தம் இருக்கலாம். நான் போய் இவள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன். தோழ நல்ல யோசனை அப்படியே செய்யுங்கள். வீர (போப் முழுந்தாள் இட்டு வணங்கி/ஏ, தெய்வ மாதா நான் சொல்வதைக் கேட்டருள வேண்டும் தாமரை மலர் போன்ற உன் கண்களால் என்னைப் பார். ஏ, கந்தர்வ ஸ்திரீயே! உன் பேரில் நான் கொண்ட மோகத்தினால் நான் செய்த குற் றத்தை மன்னித்து என்னை உன் அடிமையாகவும் வேலைக்கார னாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கண்மணி வஸ்: போம்போம் உம்முடைய உபசரணைகள் எல்லாம் எனக்கு முற்றிலும் வெறுப்பைத் தருகின்றன. எழுந்து அப்பால் நடவும். வீர (கோபத்துடன் எழுந்து ஆகா தெய்வத்தைக்கூட ஒரு நாளும் வணங்கியறியாத நான் உன்னை வணங்கினேன். அதற்குப் பதிலாக நீ இப்படியா அவமதிக்கிறாய்? அட பத்மநாபா இவளை எங்கிருந்து வண்டியில் ஏற்றி வந்தாய்? . பத்ம ஸ்வாமி உண்மையைச் சொல்லுகிறேன். நான் வந்த போது வெற்றிலை பாக்கை எடுத்துக் கொண்டு வர மறந்து விட்டேன். வண்டியை மாதவராயருடைய வீட்டின் வாசலில் சற்று நிறுத்தி விட்டு, சமீபத்தில் இருந்த கடைக்குப் போய், வெற்றிலை முதலியவற்றை வாங்கிக் கொண்டு வந்தேன். அந்தச் சமயத்தில் அவர் வீட்டிற்கு உள்ளேயிருந்து இந்த ஸ்திரீ வந்து தவறுதலாய் வண்டியில் ஏறிக் கொண்டாள் போல் இருக்கிறது! வீர தவறுதலாகவா வந்தாள்? ஆனால் என்னை நாடி வர வில்லையா? அடி வஸந்தஸேனை கீழே இறங்கு, இந்த வண்டி என்னுடையது என்பது தெரியாதோ? நான் மாத்திரம் உனக்குப் பிடிக்கவில்லை. என் வண்டி மாத்திரம் நன்றாய் இருக்கிறதா? இறங்கு கழுதை, இல்லாவிட்டால் எட்டி உதைப்பேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/143&oldid=887397" இலிருந்து மீள்விக்கப்பட்டது