பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் பட்சம் யாரிடத்தில் இருக்கிறதோ அந்தப் பூமானையே என் மனம் நாடுகிறது அவருக்கு நான் ஒருக்காலும் வஞ்சம் செய்ய நினைக்க மாட்டேன். என்னை வீணில் வருத்துவதில் என்ன பயன்? - வீர ஆகா! அப்படியா கேவலம் நித்திய தரித்திரனாகிய மாதவராயனை என்னைக் காட்டிலும் அதிகமாய் விசேஷித்தா பேசுகிறாய்? உனக்கு இவ்வளவு அகம்பாவமா? அவன் பேரில் உனக்கு அவ்வளவு ஆசையா? வஸ் : என் ஹிருதயத்திலேயே குடியிருக்கும் அவரை நான் எப்படி மறப்பேன்? வீர நீ சொல்வது நிஜந்தானா சமீபத்தில் வா. உன்னுடைய ஹிருதயத்தில் அவன் இருக்கிறானா என்று பார்க்கிறேன். அடி! வஸந்தஸேனை பிச்சை எடுக்கும் பிராம்மணனுடைய பிரிய சகியல்லவோ நீ! - வஸ ஆகா கர்னாமிருதமான மொழிகள் என்னுடைய பெருமையே பெருமை! அவரைப் பற்றி நீர் பேசப் பேச என் மனதில் பிரம்மானந்தம் உண்டாகிறது. இன்னம் பேசலாம். வீர. அவனால் இந்த சமயத்தில் உன்னை பாதுகாக்க முடிய வில்லை. அப்பேடியை நீ மிகவும் புகழ்ந்து பேசுகிறாயே! வஸ அவர் இங்கிருந்தால் எனக்கு இந்த அவமானம் நேர அவர் பார்த்துக் கொண்டிருப்பாரா? எனக்கு மாத்திரமல்ல; இன் னும் யாராயிருந்த போதிலும், அநாதைகளுக்குத் தீங்கு சம்பவித் தால் தன் உயிரைக் கொடுத்தாயினும் அவர்களைக் காப்பாற்று வாரே! வீர ஆகா! அவன் அவ்வளவு பலசாலியா! அவனல்ல அவன் பாட்டன் வந்த போதிலும் உன்னைத் தப்புவிக்க முடி யாது. பாஞ்சாலியை இராமர் பிடித்ததைப் போல இதோ உன்னை நான் பிடித்துக் கொல்லுகிறேன் பார். (அவளுடைய கழுத்தைப் பிடித்துக் கொள்ளுகிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/150&oldid=887414" இலிருந்து மீள்விக்கப்பட்டது