பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 149 வஸ் ஐயோ! இங்கு ஒருவருமில்லையா? இங்கு அநாதை யாகத் தவிக்கிறேனே! இந்தக் கொலை பாதகன் என்னை ஹிம் சிக்கிறானே! ஹே பிராண துரையே நீர் எங்கிருக்கிறீரோ தெரிய வில்லையே! என்னுடைய மனோரதம் இன்னம் நிறைவேற வில்லையே; இதற்குள் என்னுடைய உயிர் போய் விடும் போல் இருக்கிறதே ஒரு நாளாயினும் உம்மோடு கூடி வாழவில் லையே! இப்பொழுது இறந்தால் என் மனம் வேகுமோ ஹே! சுந்தராங்கா இங்கு வர மாட்டீரா இந்தக் கொலை பாதக னுக்குத் தக்க சிட்சை விதிக்க மாட்டீரா ஏ, பrகளா ஏ, வண்டினங்களா நீங்களாயினும் என் பேரில் இரக்கம் கொண்டு உடனே அவரிடம் போய்ச் சொல்லி அழைத்து வர மாட்டீர் களா? என் மனதைக் கொள்ளை கொண்ட என் துரையை நான் எப்படி மறந்து இறப்பேன்? நேற்று இரவெல்லாம் தங்களுக்குப் பணிவிடை செய்த அந்தப் பாக்கியம் திரும்பக் கிடைக்குமா என்று நினைத்திருந்தேனே ஹா தெய்வமே நீதான் ஏழையைக் காப்பாற்ற வேண்டும். வீர. இன்னம் அவனை நினைக்கிறாயா? எங்கே இனிமேல் நீ வாயைத் திறந்து பேசுவதைப் பார்க்கிறேன். (அவளுடைய கழுத்தை இரண்டு கைகளாலும் இருகப் பிடித்து மூச்சுவிட முடி யாமல் அழுத்துகிறான். வளந்தளேயனை பேச முடியாமல் துடி துடித்துக் கீழே விழுகிறாள்.) வீர: ஓகோ இன்னம் துடிக்கிறாயா? ஒழிந்து போ வேசிக் கழுதை (கைகளால் மேலும் தொண்டையை இறுகப் பிடித்து அழுத்துகிறான். அவள் மூர்ச்சித்து கீழே விழுகிறாள்.) வீர ஒழிந்தாள் வேசி; முடிந்தது காரியம்; என் கவலையும் தீர்ந்தது! இந்தப் பாப மூட்டை இந்த வஞ்சக மண்டபம் கடைசி யில் அழிந்தது. என்னைக் கையாலாகதவன் என்றா நினைத்தாய்? இப்பொழுது எப்படி இருக்கிறது? நான் இராஜாவின் மைத்துனன் என்னுடைய தயவிற்கு எத்தனையோ ஸ்திரீகள் காத்திருக்கிறார் கள்; நான் எவ்வளவு நயந்து வேண்டியும் என்னை அவமதித்தா பேசுகிறாய்! நீ எந்த விஷயத்தில் மற்ற ஸ்திரீகளைக் காட்டிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/151&oldid=887416" இலிருந்து மீள்விக்கப்பட்டது