பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் உயர்ந்தவள்? கந்தருவ ஸ்திரீயோ? அல்லது தேவ ரம்பையோ? எனக்கு உபயோகப்படாத உன் தேகம், பூச்சி புழுக்களுக்கு உப யோகப்படட்டும். எவ்வளவோ பெரிய மனுஷ்யனான எனக்கு ஒரு முத்தம் கொடுக்க மாட்டேனென்றாயே. இனி நாய் நரிக ளெல்லாம் உன்னைத் தேவையான வரையில் முத்தமிடப் போகின் றன. இங்கு எவரும் இல்லை. நான் உன்னை அனுபவித்து ஆனந்தப்பட நீ சம்மதிக்கவில்லை அல்லவோ நீ அருமையாய் வளர்த்த உன்னுடைய மாமிசத்தை நாய் நரி கழுகுகள் சந்தோஷ மாய்த் தின்பதையாயினும் மறைவில் இருந்து பார்த்து ஆனந்தம் அடைகிறேன். இந்தப் பிணத்தை யாரும் அறியாமல் இங்கே உதிர்ந்து கிடக்கும் சரகுகளால் மறைத்து விடுகிறேன். (மிகுதியிருந்த அவளுடைய ஆபரணங்களைக் கழற்றிக் கொண்டு அவளைச் சருகுகளால் மறைத்து விடுகிறான்.) (தோழனும் பத்மநாபனும் வருகிறார்கள்/ தோழ : மகாப் பிரபு பத்மநாபனை இதோ அழைத்து வந் தேன். வஸந்தஸேனையை ஒப்புவித்தேனே! அவள் எங்கே இருக்கிறாள்? காணோமே! வீர அவள் அப்பொழுதே போய் விட்டாளே! தோழ எங்கே Guলানা? வீர உனக்குப் பின்னால் வந்தாளே! தோழ அந்தத் திக்கிலேயே அவள் வரவில்லையே! வீர நீ எந்தத் திக்கில் இருந்தாய்? தோழ நான் கிழக்குத் திக்கில் இருந்தேன். வீர : அப்படியானால் சரிதான்; அவள் தெற்குத் திசையில் அல்லவோ போனாள். தோழ : நான் தென் புறத்திலும் போனேனே! வீர : அப்படியானால் அவள் வடக்குப் பக்கமாய்ப் போய் இருக்க வேண்டும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/152&oldid=887418" இலிருந்து மீள்விக்கப்பட்டது