பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் தேசத்தை விட்டுத் தனது இருப்பிடத்திற்குப் பறந்து போய் விட்டதோ? ஆகா! என்ன சாந்த குணம் என்ன குதூகலமான மொழி குழந்தையைப் போல் விளையாடுவாயே! இன்பங் களே நிறைந்த பெட்டியைத் திருடன் உடைத்து விட்டானே! இந்தப் பழி வீண் போகுமோ? ஸ்திரீ ஹத்தி தோஷம் வில குமோ? அழகான யெளவன ஸ்திரீயை யாதொரு குற்றமும் இன்றி கொல்வது என்றால், தெய்வம் இந்த ஊரில் இருக்குமோ? தலையில் இடி விழாதோ? (தனக்குள் இந்தக் கொலை பாதகன் இந்தக் குற்றத்தை என் பேரில் சுமத்தினாலும் சுமத்துவான். இங் கிருப்பது பிசகு, நான் போய் விடுகிறேன். (விரசேனன் அவனைப் பிடித்துக் கொள்ளுகிறான்) என்னை ஏன் தடுக்கிறீர்! உம்முடன் நான் தோழனாக இருந்தது போதும்; நான் போகிறேன். இனி உமக்குத் தகுந்த வேறொருவனை வைத்துக் கொள்ளும். நான் போகிறேன். வீர : அப்படியா! நீ மிகவும் சாமர்த்தியசாலியாய் இருக்கி றாயே! இந்த ஸ்திரீ ரத்னத்தை இங்கு கொன்றதுமன்றி நான் கேட்டால் என்னைத் தூவிக்கிறாயா? - தோழ அழகு! அழகு யோக்கியமான காரியம்! இவ்வளவு மேலான குணம் யாருக்கு வரும்? வீர. வாவா கோபிக்காதே கோபம் பொல்லாதது அல்லவா? அதில் இவ்விதமான காரியம் செய்வது மனிஷ்ய ஸ்வபாவந் தானே உனக்குத் தேவையான பொருள் தருகிறேன். வா போக லாம். தோழ ஐயா போதும் உம்முடைய வெகுமதியும் வேண் டாம்; உம்முடைய நட்பும் வேண்டாம்! இனிமேல் நாம் இருவ ரும் விரோதிகளாக இருப்போம். அவமானத்தை உண்டாக்கும் நட்பு எனக்குத் தேவையில்லை. நாம் இருவரும் இனி ஒருக் காலும் சேருவது இல்லை. இத்துடன் நமது ஸ்நேகம் ஒழிந்தது. வீர பிரிய நண்பா என்ன இப்படிக் கோபித்துக் கொள் கிறாய்! நேரமாகிறது; ஸ்நானத்திற்குப் போவோம் வா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/154&oldid=887422" இலிருந்து மீள்விக்கப்பட்டது