பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் வீர (தனக்குள்) இந்த இரண்டு கழுதைகளையும் அரண் மனைக்குப் போனவுடன் ஒருவரும் அறியாமல் சிறைச்சாலை யில் அடைத்து விடுகிறேன்; பிறகு இந்த இரகசியம் எப்படி வெளியில் வரப் போகிறது. இவள் உயிர் போய் விட்டதா அல்லது இன்னம் நன்றாய்க் கொல்ல வேண்டுமோ பார்க்கி றேன். சரி ஒழிந்துப் போய் விட்டாள் சருகுகளை நன்றாய்ப் போட்டு மூடுகிறேன். நான் உடனே நியாயாதிபதியினிடம் போய் வஸந்தஸேனையின் ஆபரணங்களை அபகரிக்கும் பொருட்டு மாதவராயன் இவளைக் கொன்று விட்டதாகப் பிராது கொடுக்கிறேன்! நல்ல யோசனை நல்ல தந்திரம் மாதவ ராயனும் ஒழிந்து விடுவான் சரி போகிறேன். (போப் விடுகிறான்) /ஈர வஸ்திரத்துடன் சந்தியாசி வருகிறான்.) (தனக்குள் சனியன் ஒழிந்தான்! இவ்விதமான துஷ்டர் களை அந்தக் கடவுள் ஏன் படைக்கிறானோ தெரியவில்லை! சந்நியாசி என்றால் இவனுக்கு எவ்வளவு கோபம் உண்டா கிறது! இவன் போகட்டும் என்று இதுவரையில் ஒரு மறைவில் இருந்து, இப்பொழுதே என்னுடைய காஷாய வஸ்திரத்தைக். கசக்கினேன். இவன் இனித் திரும்பி வர மாட்டான். வஸ்தி ரத்தை இந்த மரக்கிளையில் கட்டி உலர்த்துகிறேன். சே குரங்கு கள் இருக்கின்றன; கிழித்தாலும் கிழித்து விடும். கீழே தரை யில் காய வைத்தால் மண் ஒட்டிக் கொள்ளும். என்ன செய்கிறது? அதோ இலைச் சருகுகள் முட்டாகக் குவிந்திருக்கின்றன. அதன் பேரில் காய வைக்கிறேன். (வளிவந்தளேயனை கிடந்த இடத்தின் பேரில் துணியை விரித்து விட்டு அருகில் உட்காருகிறான். ஆகா இந்த உலகத்தில் என்ன இருக்கிறது) திருவருட்பா - தோடி விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது விம்முகின்ற குழவியினு மிகப்பெரிதுஞ் சிறியேன் அளக்கறியாத் துயர்க்கடலில் அழுந்தி நெடுங்கால மலைந்தலைந்து மெலிந்து துரும் பதனின் மிகத்துரும்பேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/156&oldid=887425" இலிருந்து மீள்விக்கப்பட்டது