பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 157 சந் அப்படியே செய்யலாம். மெதுவாக நடந்து வாருங்கள். அருகில் உள்ள நீரோடைக்கு முதலில் போய் ஜலம் அருந்தி மரத்தடியில் சிறிது உட்கார்ந்து சிரமப் பரிகாரம் செய்து கொள் ளுங்கள். மெதுவாக நடந்து இப்படி வாருங்கள். இடம் : நியாய ஸ்தலம். (பொதிபதி வக்கின், விசாரணை கர்த்தா முதலியோர் உட்கார்ந்து இருக்கிறார்கள். வெளியில் சேவகர்கள் கட்டிய தடிகளுடன் தவிர்கிறார்கள்) விசா : அடே சேவகா பிராது மனுக்கள் கொடுக்க வந்திருப்பவர்களைக் கூப்பிடு. சேவ பிராது, மனுக்கள் கொடுக்கிறவர்கள் கொடுக்க லாம். (மூன்று தரம் உரக்கக் கூவுகிறான்) (விரசேனன் வருகிறான்) விர அடே சேவகப் பயலே நான் ஒரு பிராது கொடுக்க வேண்டும். எங்கே நியாயாதிபதி? சேவ ஸ்வாமி இங்கேயே இருங்கள். நான் போய் நியா யாதிபதியிடம் தெரிவிக்கிறேன். வீர ஆகா! அப்படியா சேவகப் பதரே! நான் இராஜாவின் மைத்துனன் அல்லவா! நான் இவ்விடத்திலா நிற்க வேண்டும்? சேவ ஸ்வாமி கோபித்துக் கொள்ள வேண்டாம். /சேவகன் நியாபாதிபதியிடம் போகிறான்./ நியா இராஜாவின் மைத்துனரா? தூமகேது என்னும் வால் நட்சத்திரம் தோன்றுவது ஏதாவது ஒரு தேசத்தின் நாசத்தைக் காட்டும் என்பார்கள். இந்தப் பிரபு வந்தது யாருடைய கேட் டிற்கு அறிகுறியோ தெரியவில்லை. இருக்கட்டும். இன்றைய தினம் வேறு அவசரமான சில விசாரணைகள் இருப்பதாகவும், நாளைக்கு வரும் படியும் தெரிவித்து அனுப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/159&oldid=887430" இலிருந்து மீள்விக்கப்பட்டது