பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் சேவ (வெளியில் வந்து/ மகாப் பிரபு இன்றைய தினம் வேறு அவசரமான சில விசாரணைகள் இருப்பதால் நாளைய தினம் வரும்படி உத்தரவானது. நாளைக்கு வாருங்கள். வீர என்னுடைய விசாரணையை விட மற்றது அவசரமோ? இந்த நியாயாதிபதி முழு முட்டாள். என் சகோதரியின் புருஷ னாகிய இராஜனிடம் போய்த் தெரிவித்து இந்தக் கழுதையை வாலறுத்து ஒட்டி விடுகிறேன். (போகிறான்) சேவ ஸ்வாமி ஒரு கூடிணம் பொறுங்கள்; நான் போய் நியாயாதிபதியிடம் மறுபடியும் தெரிவித்துப் பார்க்கிறேன் (உள்ளே போய்/ நியாயாதிபதிகளே! அவர் மிகவும் கோபித்துக் கொள்ளுகிறார். இன்றைக்குத் தன் பிராதை விசாரிக்காததைப் பற்றி இராஜாவிடத்தில் தெரிவித்து தங்களை வேலையில் இருந்து நீக்கி வேறு நியாயாதிபதியை நியமிக்கப் போகிறாராம். நியா : பாம்பு அற்பமான ஜெந்துவாய் இருந்த போதிலும் அதன் விஷம் எவரையும் கொல்லும் அல்லவோ நல்லது; அவரை வரச் சொல் அவர் பிராதை விசாரிக்கலாம். சேவ (வெளியில் போட்) மகாப் பிரபு வரலாம்; உங்கள் பிராதை இன்று விசாரிக்கப் போகிறார்கள். வீர ஓகோ முதலில் விசாரிக்க முடியாது: இப்பொழுது முடியும். நல்லது, இவன் என்னிடத்தில் கொஞ்சம் பயம் வைத்துக் கொண்டிருக்கிறான். நான் சொல்வதைச் செய்கிறானா இல்லையா பார்க்கலாம். நியா ஐயா! அப்படி உட்கார்ந்து கொள்ளும். வீர சந்தேகம் என்ன? இந்த ஸ்தலமே என்னுடையது. நான் உட்காருவதற்கு உம்முடைய உத்தரவு வேண்டுமோ? எங்கே உட்கார விருப்பமோ அங்கே நானே உட்காருகிறேன். (விசாரணை கர்த்தாவிடம் போய்/ இங்கேதான் உட்காருவேன். இல்லை, இல்லை. இன்னம் உயரத்தில் உட்காருவேன். (வியாபாதிபதிக்குப் பக்கத்தில் போப் உட்காருகிறான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/160&oldid=887433" இலிருந்து மீள்விக்கப்பட்டது