பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 159 நியா ஐயா! உம்முடைய பிராது என்ன? சொல்லிக் கொள்ளும். வீர சொல்லும் சமயம் எனக்குத் தெரியும் அதிருக்கட்டும். நீர் முதலில் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் யார் தெரியுமா? சிறந்த குடும்பத்தில் உதித்தவன். என் தந்தை இராஜாவின் மாமனார். இராஜாவோ என் தகப்பனா ருடைய மருமகன். நான் இராஜாவின் மைத்துனன். இராஜா என் னுடைய சகோதரியின் கணவன். நியா இதெல்லாம் எனக்கு நன்றாய்த் தெரியும்; குடும்பப் பெருமையைப் பற்றி அதிகமாய்ச் சொல்ல வேண்டாம். பிராதைத் தெரிவியும். வீர இதோ சொல்லுகிறேன். ஆனால் அதில் என் பேரில் யாதொரு குற்றமும் இல்லை. என் மைத்துனனாகிய இராஜன், நான் விளையாடி, சந்தோஷமாய்ப் பொழுது போக்க, எனக்குப் பூஞ்சோலை ஒன்றைக் கொடுத்து இருக்கிறார். நான் தினம் தினம் அங்கு போயிருந்து விட்டு வருவது வழக்கம். இன்றைய தினம் அங்கு போனேன். ஆகா! எதைக் கண்டேன் தெரியுமா? என் கண்களையே நம்பக்கூட இல்லை! ஒரு யெளவன ஸ்திரீ யின் சவம் கிடக்கக் கண்டேன். நியா அது யாருடையது என்பது அடையாளம் தெரிந்ததா? வீர. நன்றாய்த் தெரிந்தது. அவள் நம்முடைய நரகத்திற்கே அழகாய் இருந்தவள்; யாவராலும் புகழப்பட்ட வஸந்தஸேனை. அவளுடைய ஆடை ஆபரணங்களைக் கண்டு பேராசை கொண்ட எந்தக் கொலை பாதகனோ அவளைத் தனிமையான அந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்க வேண்டும். அங்கு அவளுடைய தொண்டையைப் பிடித்து நெரித்துக் கொன்று விட்டான். ஆனால் நானல்ல. நியா ஆகா! பாராக்காரர்கள் எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்து விட்டார்கள். விசாரணை கர்த்தா இதை எழுதிக் கொள் ளும், ஆனால் நானல்ல" என்பதையும் எழுதிக் கொள்ளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/161&oldid=887435" இலிருந்து மீள்விக்கப்பட்டது