பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 161 வீர ஒகோ தாய்க் கிழவியா வந்தாயா சரி. நியா நீ வஸந்தஸேனையின் தாயா? தாய் ஆம். நியா உன் மகள் இப்பொழுது எங்கிருக்கிறாள். தாய் ஒரு நண்பர் வீட்டிற்குப் போயிருக்கிறாள். நியா அவருடைய பெயர் என்ன? தாய் ! ஸ்வாமி இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வெட்க மாய் இருக்கிறது! - நியா நியாய ஸ்தலத்தில் சொல்லுவதினால் யாதொரு குற்றமும் இல்லை. இங்கே வெட்கப்பட்டால் காரியம் எப்படி ஆகும்? கேட்பதற்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். தாய் நற்குணமே அணியாகப் பெற்ற மாதவராயருடைய மாளிகைக்குள் போனாள். வீர இவள் சொன்னதைக் கேட்டீர்களா? இதை எழுதிக் கொள்ளுங்கள். மாதவராயன்தான் குற்றவாளி. . . . நியா அவளுடைய நண்பர் எப்படிக் குற்றவாளி ஆவார்? அவரையும் வரவழைத்து விசாரிப்போம். அடே சேவகா: மாதவராயரை அழைத்து வா! (போப் அழைத்து வருகிறான்) மாத (தனக்குள் இந்த நியாய ஸ்தலம் சமுத்திரத்தைப் போல் இருக்கிறதே! இதைப் பார்க்க என் மனதில் ஒரு வித சஞ்சலம் உண்டாகிறது. வழியில் பலவிதமான கெட்ட சகுனங் கள் தோன்றின. என்ன தீங்கு சம்பவிக்குமோ தெரியவில்லை. (நிலைப்படியில் தலை இடிபடுகிறது, ஆகா! மேலும் அப சகுனம் உண்டாகிறது. நல்லது ஈசுவரன் இருக்கிறான். எல்லாம் விதியின்படி நடக்கிறது. வ.கோ.-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/163&oldid=887439" இலிருந்து மீள்விக்கப்பட்டது