பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் நியா (தனக்குள் அதோ மாதவராயர் வந்து விட்டார். அவருடைய முகத்தைப் பார்த்து அவர் இவ்விதமான குற்றம் செய்யக் கூடியவர் என்று யார் சொல்லுவார்கள்? ஒரு மனித னுடைய அகத்தின் அழகை அவனது முகம் கண்ணாடி போலக் காட்டுமல்லவா! - மாத நியாயாதிபதிகளே! சித்தத்தின்படி இதோ வந்தேன். அடியேனை அழைத்த காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். நியா மாதவராயரே வாரும்; இந்த ஆசனத்தில் உட்காரும். வீர ஸ்திரீ ஹத்தி செய்தவரே! வாரும். நியா மாதவராயரே! உமக்கும் இந்த ஸ்திரீயின் புத்திரிக் கும் நட்புண்டா? மாத எந்த ஸ்திரீ? நியா இதோ நிற்பவள் வஸந்தஸேனையின் தாய். மாத (எழுந்து வணக்கமாக ஒகோ அப்படியா! நான் இது வரையில் பார்த்ததில்லை. அம்மா! வஸந்தஸேனை வீடு வந்து சேர்ந்தாளா? - தாய் ! அப்பா குழந்தாய்! இன்னம் வரவில்லை. நீ நீடுழி வாழ வேண்டும். (தனக்குள்) இவர்தாம் மாதவராயரா ஆகா! என் புத்திரியின் பாக்கியமே பாக்கியம். நல்ல சீலரையே விரும் பினாள். என்ன அழகு! என்ன மேன்மைக் குணம் இவர் அவ ளுக்குக் கிடைப்பாரானால் அவள் ஜன்மம் கடைத்தேறி விடும். நியா மாதவராயரே! இவளுடைய பெண்ணாகிய தாலி வஸந்தஸேனைக்கும் உமக்கும் நட்புண்டா? (மாதவராயர் திடுக்கிட்டு வெட்கிக் கீழே குனிகிறார்) வீர என்ன பாசாங்கு செய்கிறான்! தான் செய்த குற்றத்தை மறைக்க இது நல்ல தந்திரம் சாமர்த்தியசாலிதான் நியா மாதவராயரே! உம்மீது பெருத்த குற்றம் சுமத்தப் பட்டிருக்கிறது. ஆகையால் யோசனை செய்யாமல் சொல்லும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/164&oldid=887441" இலிருந்து மீள்விக்கப்பட்டது