பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் அவன் என்னைத் தடுத்துக் கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளி உதைத்தான். அதை இராஜனிடம் தெரிவிக்குமுன் தங்களிடம் சொல்லிக் கொள்ளலாமென்று வந்தேன். நியா : அந்த வண்டி யாருடையது? வீர. அது மாதவராயருடையதென்றும், அவருடைய உத்தி யான வனத்தில் சந்திக்கும் பொருட்டு அதில் வஸந்தஸேனை போவதாயும் வண்டிக்காரன் தெரிவித்தான். வீர பார்த்தீரா உண்மையை? நியா : மாசற்ற சந்திரனைக் கிரகணம் பிடிக்கும் போல் இருக்கிறதே! நல்லது; வீரகா! உன் பிராதை விசாரிக்கிறேன். நீ குதிரையின் பேரில் ஏறிக் கொண்டு இவருடைய பூஞ்சோலைக்குப் போய், அங்கே கொலை செய்யப்பட்ட ஒரு ஸ்திரீயின் பிணம் கிடக்கிறதோ என்று பார்த்து விட்டு வா? வீர : அப்படியே இதோ வந்து விட்டேன். (போய்த் திரும்பி வருகிறான்) வீர. ஒரு ஸ்திரீயின்பிரேதத்தைக் காட்டு மிருகங்கள் இழுத்துக் கொண்டு போயிருக்கக் கண்டேன். நியா:-ஸ்திரீ என்பது எப்படித் தெரிந்தது. வீர அங்கு கிடந்த தலை மயிரின் நீட்சி, அழகு முதலிய வற்றாலும் கால் கைகளின் அடையாளங்களினாலும் கண்டு பிடித்தேன். நியா: வாரும்; மாதவராயரே உண்மையைச் சொல்லி விடும். மாத என்ன ஆச்சரியம்! என்ன அநியாயம்! தன் உயிரைக் காட்டிலும் அதிகமாக என்மீது அன்பையும் ஆசையையும் கொண்டவளும், நீதியிலும் அரியவளுமான அந்த சுந்தராங்கி யின் சிரத்திலுள்ள ஒரு சிறிய உரோமத்திற்கும் தீங்கு செய்ய எனக்கு மனம் வருமா? என்னையும் என் குணத்தையும் நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/168&oldid=887449" இலிருந்து மீள்விக்கப்பட்டது