பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் அன்பை மறந்து விடாதே ஆதரவற்ற என் குடும்பத்தை உன் வசத்தில் ஒப்புவித்தேன். என் மனைவியையும் குழந்தையை யும் இனி நீ தான் காப்பாற்ற வேண்டும். ஸோ ஐயா! மித்ர ரத்னமே! அடிவேர் போன பின் மரம் உயிருடன் இருப்பதும் உண்டோ? ஒரு நாளும் இல்லை. உங்க ளுக்கு முன் என் உயிர் இதோ போய் விடும் போலிருக்கிறது. மாத நண்பா அப்படி அல்ல. தகப்பன் இறந்த போதிலும் அவன் பிள்ளையின் ஸ்வரூபமாக உயிருடன் இருக்கிறான் என்பது சாஸ்திரம். ஆகையால், என்னிடம் இருந்த விதமே நீ என் குழந்தையிடத்திலும் இருந்து அவனை ஆதரிக்க வேண்டுகி றேன். இதுதான் என் கடைசி வேண்டுகோள். நான் இறக்குமுன் என் குழந்தையின் முகத்தை ஒரு முறை பார்க்க வேண்டும். நீ போய் அவனை அழைத்து வா. இந்த விஷயத்தை நான் இறந்த பின் என் நாயகியினிடத்தில் தெரிவிக்கலாம். நியா அடே சேவகா! இவரைச் சண்டாளர்களிடம் ஒப்பு வித்து அரசனுடைய கட்டளையை நிறைவேற்றச் சொல்லி விடு. சேவ இப்படி வாரும் ஐயா! (மாதவராயரை வெளியில் அழைத்து வருகிறான்) மாத ஜெகதீசா இனி உன்னுடைய துணையையன்றி எனக்கு வேறொரு துணையுமில்லை. (நிறுவினா கதிலேதுரா - என்ற LTL46T மெட்டு) ப. நினையலால் கதியேதையா ஈசா! ஜெகதீசா பரமேசா ஸர்வேசா! அ. நாதனே! உன் சோதனையோ! பேதையினேன் ஏது செய்வேன்? நாதா குணநீதா பொற்பாதா ஜகந் நாதா (நி) (தனக்குள் ஆகா! இதுதான் பூலோகத்தின் நீதியோ இது தான் அரசாட்சியோ? இதுதான் செங்கோலோ? ஒரு மயிரிழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/176&oldid=887467" இலிருந்து மீள்விக்கப்பட்டது