பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2 சண் : பட்டிக்காட்டான் முட்டாயிக் கடையெப் பாக்கராப்புலே என்னையா இப்படிப் பார்க்கிறீங்க? என்னமோ பாவம் பெரிய வீட்டுப்புள்ளே தலைவிதியினாலே போறாரு. கூட்டங்கூட வாணாம் போங்கய்யா. மாத (ஒருபுறமாக மனிதனுடைய சத்ருவாகிய கர்ம வினையின் மாறுபாட்டை யார்தாம் அறிவர். எனக்கு இவ்வித மான கால வித்தியாசம் ஏற்படப் போகிறதென்று நான் ஒரு நாளும் நினைக்கவே இல்லை; வீதியின் வழியாகக் கட்டி இழுக்கப் படும் நிலைமைக்கு வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் என்னைக் காணும் நகரத்தினர் யாவரும் கண்ணிர் விட்டு அழுகின்றனர். நரகத்தின் மத்தியில் ஒரு துளி தேன் வாயில் விழுந்ததைப் போல, இதைக் காண என் மனம் சற்று ஆறுதலடைகிறது. யாவரும் என்னைக் காப்பாற் றும்படி ஈசுவரனைப் பிரார்த்திக்கிறார்கள். 1 சண் : அடியாத்தே! ஊர்ச்சனங்கள்ளாம் இப்படியா அளு வும் கண் கொண்டுதான் பார்க்க முடியலியே! 2 சண் : அடே அந்தாலே பாருடா ஊட்டு சன்னல்லே நிக்கிற பொட்டச்சிகள்ளாம் அளுவுறாங்கடா 1 சண் : (தண்டோராப் போடுகிறான் துடும், துடும், துடும், துடும். ஊரு ஜனங்களுக்கு எல்லாம் தெரிவிப்பது என்னமெண் டால், நகராதிபதி ஊட்டு மாதவ்ராயரு, தேவிடியா வஸந்த ஸேனையைக் கொன்னுப்புட்டு, அவளொட நவையெல்லாம் எடுத்துக்கிட்டாராம். அதுக்காவஅவரைநம்ம மவராசாகொன்னுட ஆக்கினைப் பண்ணிப் புட்டாங்க. இந்த மாதிரி பண்ணறவங் களுக்கு இப்படியே தலை போயிடும்.துடும், துடும், துடும், துடும். மாத (காதில் கைகளை வைத்து மூடிக் கொண்டு) ஹா! ஈசுவரா! விருத்தம் - முகாரி ஈசனே யேழை யிந்தத் தூஷணை பெறவோ வந்தேன்? மாசிலா நெறியே நின்றேன், மரித்திடல் மதியே னிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/178&oldid=887471" இலிருந்து மீள்விக்கப்பட்டது