பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் சிசு ஹா! அப்பா அப்பா (ஆவலோடு தகப்பன் பேரில் விழுகிறான்) மாத வாடா என் செல்வமே. (வாரி அணைத்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு) ஆகா, விருத்தம் - ஸ்ஹானா சேயனே! கண்ணே! இந்தச் செவ்விளங்கரத்தினால் நீ தீயெனக் கிடவ்ோ பாவி யென்சுத னாக வந்தாய்? மாய நீ யென்செய் வாயோ! மலிபுகழ் செல்வம் யாவும் நீ யென மதித்தே வந்த நினைவினி யகன்ற தையோ! அழகிய இந்தச் சிறிய கையால் எனக்குக் கொள்ளி வைக்கப் போகிறாயா? ஐயோ! குழந்தைப் பருவத்திலேயே என்னை நீ இழந்து விட்டால் இன்னும் சில வருஷங்களில் என்னுடைய நினைவே இல்லாமல் போய் விடுமே! ஒரு தகப்பன் இருந்தான் என்பதை உனக்கு நினைப்பூட்ட நான் உனக்கு என்ன பொருளை வைத்திருக்கிறேன் பொருள்களை வாரிக் கொடுத்து ஊரில் யாவருக்கும் நன்மை செய்தேன். அதனால் உனக்கு மாத் திரம் மீளாத் துன்பத்தைக் கொடுத்தேன். ஆகையால், நான் உனக்கு மாத்திரமே விரோதியானேன். நீ பிற்காலத்தில் தரித்திரத்தால் வருந்தும் போது, இந்தப் பாவி வயிற்றில் ஏன் பிறந்தேன் என்று துஷிப்பாய். அதையெல்லாம் கேட்க நான் கடமைப்பட்டவனே இப்பொழுது நான் என்னுடையது என்று உனக்குத் தரக் கூடியது என்னுடைய பூணுரல் ஒன்றுதான். இதைத் தருகிறேன். தங்கம், நவமணி, முதலியவற்றால் செய்த ஆபரணங்கள் எல்லாம் பிராம்மணனுக்கு பூணுாலைப் போல அவ்வளவு பெருமை யான பூஷணம் அல்ல. இதனால் நாம் தெய்வங்களுக்கும் இருவிகளுக்கும் ஆராதன்ை செய்யும் மேன்மையைப் பெறு வதால் இது ஒன்றே நமக்குப் போதுமான ஐஸ்வரியம் சாஸ்திரக் கிரகப்படி நான் உனக்குப் பூணுரல் கல்யாணம் செய்து வைக்கக் கொடுத்து வைக்காப் பாவியான போதிலும் இப்பொழுது இதைக் கழுத்தில் தரித்துப் பார்க்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/180&oldid=887476" இலிருந்து மீள்விக்கப்பட்டது