பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் ஸோ ஹே நண்பர்களே! என்னுடைய சிநேகிதரை விட்டு விடுங்கள். உங்களுக்கு ஒரு சரீரந்தானே வேண்டும்; இதோ என் னுடைய தேகத்தை உங்கள் வசம் ஒப்புவித்தேன்; என்னைக் கொண்டு போங்கள். 1 சண் இதென்ன பைத்தியம் ராசா ஆக்கினையை மீறி வேறே மனிசரைக் கொண்டு போவ முடியாது; நேரமாச்சு; போவலாம். //வரும் போகின்றனர். மறுபடியும் ஒருதரம் முன்மாதிரி பறை சாற்றுகின்றனர்) (அதற்கருகில் இருந்த அரண்மனை மேன் மாடியில் ஒரு அறையில் அன்டபட்டிருந்த பத்மநாபன் தனக்குள்) இதென்ன ஆச்சரியம்! இப்படியும் அநியாயம் செய்வதுண்டா ஒரு பாவத் தையும் அறியாத மாதவராயரைக் கொல்வதா? நான் சோலை யில் இருந்து வந்தது முதல் என்னை வஞ்சித்து இந்த அறையில் போட்டு அடைத்து இருக்கிறான் கொலை பாதகன். நான் இந்தச் சமயம் எப்படி வெளியில் போவேன்? /உரக்க) நில்லுங்கள்! நில்லுங்கள் வஸந்தஸேனையைப் பாவியாகிய நானே சோலைக்கு அழைத்துப் போனேன். அங்கே வீரசேனன் சொல்லிற்கு அவள் இணங்கவில்லை. ஆதலால் அவனே கொன்றவன். இந்த புண்ணியவான் அல்ல; இவரை விட்டு விடுங்கள். (தனக்குள்) நான் சொல்வது இவர்கள் காதில் விழவில்லையோ? போகிறார் கள்! நான் இந்த சமயத்தில் சும்மா இருந்தால் நிரபராதியான ஒரு பெரிய மனிதருடைய உயிர் போய் விடும். நான் எப்படி வெளி யில் போவேன்? கதவை வெளியில் பூட்டியிருக்கிறானே. இந்த ஜன்னலின் வழியாகக் குதிக்கிறேன். இதனால் இறந்தாலும் சரி. நல்ல விஷயமானதால் மோக்ஷமாயினும் கிடைக்கும். (கீழே குதிக்கிறான்) ஹா உயரம் அதிகமானதால் நன்றாய் அடிபட்டு விட்டது! ஐயோ! எழுந்திருக்க முடியவில்லையே! அவர்கள் போய் விடுகிறார்களே! என்ன செய்வேன்? என் உயிர் இதனால் போனாலும் போகிறது. (மெதுவாக எழுந்திருக்கிறான்) ஒடிப் போய் உண்மையைத் தெரிவித்து அவரை விடுவிக்கிறேன். அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/182&oldid=887483" இலிருந்து மீள்விக்கப்பட்டது