பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 181 பிறகு என் உயிர் போவதானாலும் கவலையில்லை. (அடிபட்டு வருந்தும் தேகத்துடன் மெதுவாக எழுந்து தட்டித் தடுமாறிக் கொண்டு ஓடி வருகிறான்./ 1 சண் சற்று தூரத்தில்) என்ன ஆச்சரியங்கறேன்! நம்பளே ஆரோ அளெக்கிறானே என்னாத்துக்கோ தெரியலையே! பத்ம : நான் சொல்லுவதைக் கேளுங்கள். மாதவராயர் குற்ற வாளி அல்ல. நானே வஸந்தஸேனையைப் பூஞ்சோலைக்கு அழைத்துப் போனவன். அங்கே என் எஜமானனே அவளைக் கொன்றவன். 2 சண்: அடியாத்தே புதுமையாக்கிதே நீ சொல்றது. நெசந் தானாய்யா? பத்ம சத்தியம்; நான் நியாய ஸ்தலத்திலேயே இதைச் சொல்லியிருப்பேன். என்னை என் எஜமானன் ஒரு அறைக்குள் விட்டுப் பூட்டி விட்டார். (வேறொரு பக்கமாக வீரசேனன் ஏப்பம் விட்டுக் கொண்டு வருகிறான்) வீர (தனக்குள்) இன்றைக்கு முதல் தரமான சாப்பாடு! வயிற்றைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லையே! என் விருப்பத்திற்கு இணங்காத வஸந்தஸேனையை ஒழித்தேன் அவள் ஆசை வைத்த மாதவராயன் பேரில் பழியைச் சுமத்தி னேன். இது ஸுதினமானதால், நல்ல விருந்து சாப்பிட்டேன். அதோ சண்டாளர் அவனை அழைத்துக் கொண்டு போகிறார் கள். நானும் அவனைக் கொல்வதைப் பார்த்து என் கண்களுக் கும் விருந்து செய்விக்கிறேன். (கொஞ்சதுரம் போய்/ அதோ பத்மநாபன் போகிறானே அவனை நான் சிறையில் அல்லவோ அடைத்து வைத்திருந்தேன்! அவன் உண்மையை வெளியில் சொல்லி விடுவானோ என்னவோ தெரியவில்லையே! நானும் போய் சமயத்திற்குத் தகுந்த விதம் நடந்து கொள்ளுகிறேன். (வருகிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/183&oldid=887484" இலிருந்து மீள்விக்கப்பட்டது