பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் படாத வேறோரிடத்திற்குப் போய் செளக்கியமாக இருங்கள். மித்ரா இவனை அழைத்துக் கொண்டு போ. ஸோமே : (விசனத்துடன் ஐயா! உமக்குப் பிறகு நான் உயி ருடன் இருப்பேன் என்று நினைக்க வேண்டும். மாத ஸோமேசா ஜீவாத்மா நம்முடைய கைக்குட்பட் டது அல்ல. உன்னுடைய உயிரை விடவும், வைத்துக் கொள்ள வும், நீயா அதற்கு நாதன். அதற்கு அதிகாரி வேறு ஒருவன் இருக்கிறான். இந்த உலகத்திற்கு வந்த காரியம் முடியும் வரை யில் எவனும் இதை விட்டு ஈசுவரனுடைய அனுமதியின்றிப் போக முடியாது. அவசரப்படாதே. நன்றாய் யோசனை செய்து பார். அநாதையான இவர்களை, நீ காப்பாற்ற வேண்டும். என் னுடைய கடைசி வேண்டுகோளைச் செய். நேரமாகிறது, போ! ஸோமே : (தனக்குள்) இவர் சொல்வது நியாயமாய் இருந்த போதிலும், இவர் இறந்தபின் நான் இதை எப்படி சகித்துக் கொண்டிருப்பேன்? முதலில் இவருடைய மனைவியைத் தேற்றி விட்டுப் பிறகு என் உயிரை விடுகிறேன். (அவரை நோக்கி) சரி ஸ்வாமி! இதுதான் கடைசியாக உங்களுடைய சுந்தர முகத்தை நான் பார்ப்பதோ? (அவரை ஆலிங்கனம் செய்து குழந்தையை எடுத்துக் கொள்ளுகிறேன். குழந்தை அப்பா அப்பா வென்று அழுகிறான்.) வீர அடே நான் அந்தப் பையனையும் கொல்லச் சொன் னேனே! 1 சண் : (அழுத்தமாக) ராசா உத்திரவில்லீங்க; நாங்க கொல்ல மாட்டோம். இவரை மட்டுந்தான் கொல்லச் சொன்னாரு. (ஸோமேஸன் குழந்தை இருவரை விட்டு மற்றவர் மேலும் போகின்றனர்) 2 சண்: சரி! இதுதான் எடம். களுவு மரம் அதோபாத்தியா? இதுலே தூக்கிப் போட்றது ஒன்னொட மொறை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/186&oldid=887490" இலிருந்து மீள்விக்கப்பட்டது