பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் - 185 1 சண் என்னொட மொறையானா நான் மெதுவாத்தான் போடுவேன். எங்கப்பன் செத்துப் போனப்ப என்னெக் கூப்பிட்டு, அப்பா ஆரெனாச்சும் கொல்ல உத்தரவானா, அவசரப்படாமே நிதானி. ராசாவுக்குப் புள்ளே கிள்ளே பொறந்திச்சின்னா, குத்தவாளியெ உடச் சொல்லிப் புடுவாங்க. அப்படி இல் லேன்னா, குத்தவாளி தப்புதம் செய்யல்லேன்று ஏதாச்சும் நல்ல சாக்கி கெடச்சு உட்டுட உத்தரவாவலாம். அப்படி இல்லாமெப் போனா ஒரு ராசா போயி இன்னொரு ராசா வரலாம். அதுக்காவ உட்டுடலாம் இன்று எங்கப்பன் சொன்னான். வீர (ஒரு புறமாக ஓகோ இராஜன் மாறப் போகிறானோ! சண்டாளப் பயலே! இருக்கட்டும். 1 சண் சரி சேனா நேரமாச்சு ஆவட்டும் நிக்காதே. 2.சண் கைகுவித்து ஐயரே! நாங்க ராசா உத்தரவைச் செய்ய ரோம். எங்க பேருலே தப்புதமில்லே; எங்க பேருலே வருத்தப் படாதே! ஏதாச்சும் சொல்லிக்கினுமானா சொல்லிக்க. நாங்க ஒரு பாவத்தையும் அறியாதவங்க. குத்தங் கொறையிருந்தா மன்னிச்சுக்கோ மவராசா (வணங்குகிறான்) மாத ஆகா! என்ன இவர்களுடைய நற்குணம் பலரைக் கொன்று, ஹிருதயம் கல்லாய் இருக்கப் பெற்ற சண்டாளரே ஆயினும், என் விஷயத்தில் நிரம்ப இரக்கம் உடையவராய் இருக்கிறார்கள்! நான் குற்றவாளியல்ல என்பது சாதாரணப் பாமர ஜனங்களுக்கு எல்லாம் இயற்கையிலேயே தெரிந்து போயிருக்கிறது! அந்த நியாயாதிபதிக்கும் அரசனுக்கும் மாத்திரம் உண்மையை அறிந்து கொள்ளும் திறமை இல்லாமற் போனது தான் ஆச்சரியம் தருமமே ஜெயமென்பது பொய்யாகுமோ? இதோ என்னைக் கொல்லப் போகிறார்கள். அதர்மமே ஜெயமடையும் போல் இருக்கிறது. விதியானது என்னைப் பலமாக இழுத்துச் செல்லும் பொழுது நான் எவ்வளவு முயன்ற போதிலும் என்ன பயன்? இந்தக் கழுமரத்தில் என்னைப் போடப் போகிறார்கள்! ஆகா! ஈசுவரா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/187&oldid=887492" இலிருந்து மீள்விக்கப்பட்டது