பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் திருவருட்யா - எதுகுலகாம்போதி பதியேயெம் பரனேயெம் பரமனே யெமது பரா பரனே-யானந்த பதந்தரு மெய்ஞ்ஞான நிதியே மெய்ந்நிறைவே மெய்ந்நிலையே மெய்யின்ப நிருத்தமிடும் தனிமை நிபுண மணிவிளக்கே கதியே யென்கண்ணே யென்கண்மணியே யெனது கருத்தே என் கருத்திலுற்ற கனியே செங்கனியே துதியே யென்றுரையே! யென்றோழா வென்னுளத்தே சுத்த நடம்புரிகின்ற சித்த சிகாமணியே! உயர் குலத்தில் பிறந்ததும், நகராதிபதியின் புதல்வனாய் உதித்ததும், நற்குண நல்லொழுக்கத்தைப் பெற்று யாவரும் துதிக்கும் பாக்கியத்தை அடைந்ததும், இந்தப் பெருமையைப் பெறுவதற்குத் தானோ? ஆகா! கொடிது கொடிது!! மேலான நிலைமையில் பிறந்து, பற்பல புகழைப் பெற்று இவ்விதம் பாதாளத்தில் வீழ்வதைவிட, ஒரு ஏழையாய்ப் பிறந்து, யாதொரு இடைஞ்சலும் இல்லாமல் இருப்பது எவ்வளவு மேலான பதவி. மலையின் பேரில் ஆகாயத்தை அளாவி பெருத்த மரமாய் வளர்ந்து புயற்காற்றால் முறிபட்டுப் பாதாளத்தில் விழுவதைக் காட்டிலும் தன்ரயில், கட்டைப் புல்லாயிருந்து பலர் கால்களா லும் மிதிப்படும் தன்மையில் இருப்பது மேல். ஏனென்றால், அந்தப் புல் காய்ந்து கட்டையாய் இருந்த போதிலும் அதற்கு அழிவில்லை. ஒரு மழை பெய்தால், அழகாய்த் துளிர்த்துக் கொள்ளும் அல்லவா! மகா பாவியான நான் ஏன் நல்லவர்கள் வயிற்றில் பிறந்தேன்? என்னால் அவர்களுக்கும் அல்லவோ என்றும் மாறாத அவமானமும் இழிவும் உண்டாயின. (அப்படியே கண்களை மூடி விசனத்து தவிர்கிறார்) /வளிவந்தளேயனையும் சந்தியாசியும் வருகிறார்கள்) சந்: அம்மா நகருக்கு சமீபத்தில் வந்தோம். எங்கே அழைத்துப் போக வேண்டும்? வஸ என் ஆருயிர்க் காதலராகிய மாதவராயருடைய வீட் டிற்கு முதலில் போக வேண்டும். சந்திரனைக் கண்டு அல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/188&oldid=887494" இலிருந்து மீள்விக்கப்பட்டது