பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் மாத எவ்வளவு விரோதியான போதிலும் இவன் மனப் பூர்வமாக அபயம் என்று நம்முடைய காலில் விழுந்த பிறகு இவன் பேரில் நம்முடைய வாள் படலாமா? நான் இவனுக்குக் காட்டும் தயையே இவனுக்குப் பெருத்த தண்டனையாகும். ஆகையால் இவனை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுங்கள். சசி ஆகா இதுவல்லவோ உத்தம குணம் சரி. உங்கள் சித்தம் போல ஆகட்டும். (ஆட்களை நோக்கி) இவனை விட்டு விடுங்கள். (வீரசேனன் விடப்படுகிறான்) வீர : அப்பா தப்பிப் பிழைத்தேன்! (தனக்குள்) இந்த நித்திய தரித்திரப் பார்ப்பானுக்கு இவ்வளவு பெருமையா! (சந்தானகன் ஓடி வருகிறான்/ சந்தா: ஸ்வாமி மோசம் வந்து விட்டது. உடனே புறப்பட வேண்டும். ஒரு rணம் தாமதித்தால் விபத்து சம்பவிக்கும். மாத சந்தானகா என்ன இது! சந்தா : என்னோடு வாருங்கள்; உங்கள் மாளிகைக்குப் போக ஒரு கூடிணம் தாமதமானால் பதிவிரதா சிரோன்மணியான உங்கள் நாயகியை உயிரோடு காண முடியாது. மாத ஆகா! என் ஆருயிரே என் பொருட்டு என்ன காரியம் செய்ய நினைத்தாய்! (யாவரும் தாறுமாறாப்ப் போப் விடுகிறார்கள்) மாதவராயருடைய மாளிகை. அக்னி வளர்க்கப் பட்டு இருக்கிறது. அதற்கு அருகில் மஞ்சள் புடவை உடுத்திக் கொண்டு கோகிலம் நிற் கிறாள். குழந்தை சிசுபாலன் அவளுடைய இடுப்புப் புடவையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். ஸோமேசன் வேறொரு புறமாக நிற்கிறான். அங்கம் 3 காட்சி 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/194&oldid=887508" இலிருந்து மீள்விக்கப்பட்டது