பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் 19 (2) பட்டிசைந்த மேனியாள் பாவையாளோர் பாகமா யொட்டிசைந்த தன்றியும் முச்சியா ளொருத்தியாக் கொட்டிசைந்த வாடலாய்க் கூடலால வாயிலா யெட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையோ! மாத (பெருமூச்சுவிட்டு/ஆகா! என்ன காலவித்தியாசம்! என்னுடைய உன்னத திசையில் நான் கொடுத்த பலி பிண்டத்தை எத்தனையோ காகங்களும், அன்னங்களும், மற்றப் பறவை களும் என் மாளிகை வாசலில் வந்து நிறைந்து வாறிக் கொண்டு போய்க் குதுகலமாகத் தின்றன. இப்பொழுது நான் அர்ப்பணம் செய்வது புல்லில் இருக்கும் எறும்புகளுக்கும் போதாமல் அவ்வளவு அற்பமாய்ப் போய்விட்டதே! ஈசுவரா இதுவும் உன் அருளோ (கீழே உட்காருகிறார்) ஸோமே ; ஸ்வாமி! நமஸ்காரம்! மாத மங்களம் உண்டாகட்டும். மித்திர ரத்தினமே! வா; உட்கார். ஸோமே ஆக்ஞை, (உட்காருகிறான். மாதவராயர் ஏதோ யோசனை செய்கிறார்) என்ன யோசனை செய்கிறீர்கள்? மாத மித்திரா! விருத்தம் : சங்கராபரணம் என்னென வுரைப்பே னன்பா! இன்மையின் கொடுமைதன்னை முன்னுள புகழை நட்பை மொழிகளின் மதிப்பை நீக்கும் உன்னினு முடலைத் தீய்க்கு மொண்மையு மிளமை போக்கும் அன்னையும் பகைமை கொள்ளும்; அலகிலாச் சிறுமை நல்கும். துக்கத்தை அடுத்தாற்போலத் தொடர்ந்து வரும் சந்தோஷம், இரவிற்குப் பின் சூரியப் பிரகாசம் உண்டாகி அதை ஒட்டுவதைப் போல் இருக்கிறது.ஆனால், செல்வத்தில் இருந்து தரித்திர நிலைமையை அடைபவன், பார்வைக்கு மனிதனைப் போல் இருந்த போதிலும் அவன் நடைப் பிணமே ஒழிய வேறில்லை. இந்நிலைமையைக் காட்டிலும் கொடியது வேறு என்ன இருக் கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/21&oldid=887523" இலிருந்து மீள்விக்கப்பட்டது