பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் ஸோமே ; அப்படியானால் தரித்திர நிலைமையில் இருப்ப வர்கள் யாவரும் உயிரை விட்டு விட வேண்டும் என்றாநினைக் கிறீர்கள்? மாத என் விருப்பத்தின்படிக் காரியம் நடப்பதாய் இருந்தால், இவ்விதம் உயிர் வாழ்தலைக் காட்டிலும், உயிரைத் துறப்பதையே உத்தமமாகக் கொள்வேன். பிராணனை விடுவது சொற்பக் கஷ்டமேயாகும். தரித்திரனாய் இருப்பது ஆயுட்காலம் முழுதும் ஒழியா வேதனையைத் தரக் கூடியதல்லவோ லோமே ; ஸ்வாமீ! விருத்தம்: தோடி உயிரினு மரிய நண்பீர் உருகிநீர் வானங் காணாப் பயிரினு மதிகம் வாடிப் பரிபவ முறுத லென்னோ? செயிரினை யடையா நன்மைச் செல்வமே நிதிக்கு மேலாம்; துயரினை விடுப்பீர் கானத் துடித்தனே னினிய அன்பீர்! நீங்கள் இதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் ஏழ்மைநிலைமையை அடைந்ததினாலேயே உங்களுக்குத்தாழ்மை யும் இகழ்ச்சியும் உண்டாய் விடுமோ? நண்பர்களுக்கும் இல்லை என்று வந்த யாசகர்களுக்கும் வாறி வாறிக் கொடுத்து, ஐசுவரி யத்தை எல்லாம் இழந்ததினால் உங்களுடைய கீர்த்தி அதிகரித்ததே ஒழிய அதனால் உங்களுக்கு யாதொரு மானஹானியும் உண்டாக வில்லை. சந்திரன் தேய்ந்து, தேய்ந்து, அற்பத்திலும் அற்ப மாய்த் தோன்றும் சமயமாகி மூன்றாம் பிறையில்தானே அது மிகவும் நேத்திரானந்தமாய்க் காணப்படுகிறது. மாத நண்பா என்னுடைய சொந்த உபயோகத்திற்கு ஐசுவரியம் இல்லை என்று நான் சிறிதும் விசனிக்கவில்லை. விருத்தம்: மோகனம் கருப்பைக்குள் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும் விருப்புற் றமுதளிக்கு மெய்யன்-உருப்பெற்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/22&oldid=887524" இலிருந்து மீள்விக்கப்பட்டது