பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் வஸந்தஸேனை (தனக்குள்) ஐயோ! இப்படி எவ்வளவு துரந்தான் ஒடுவேன். இந்தச் சண்டாளர்கள் விடாமல் துரத்திக் கொண்டு வருகிறார்களே! என்னுடன் ஒடி வந்த பணிப் பெண் களைக் கூடக் காணேனே அடி மல்லிகா அடி வத்சலா எங்கே போய் விட்டீர்கள்? நான் இதோ இருக்கின்றேன்; ஒடி வாருங்கள்; ஒடி வாருங்கள். வீர அடே நண்பா அவள் யாரோ ஆட்களை உதவிக்கு அழைக்கிறாள்! நாம் என்னடா செய்கிறது? தோழ பயப்பட வேண்டாம். நானிருக்கிறேன். வஸ் : அடி மல்லிகா எங்கே மாயமாய் மறைந்து விட்டீர்கள்? தோழ நல்ல புத்திசாலி தன் பணிப்பெண்களை யல்லவா கூப்பிடுகிறாள். வீர : அப்படியா! நல்லவேளை தான்; நான் நூறு மனிதரை அடிக்கக் கூடிய வீரன் அல்லவா? அதனால் தானே நான் பிறந்த பொழுதே எனக்கு வீரஸேனன் என்று பெயர் கொடுத்தார்கள். இந்த ஸ்திரீகள் என்னை என்ன செய்யக் கூடும்? வரட்டும் ஒரு கை பார்க்கிறேன். வஸ் (கைகளைப் பிசைந்து கொண்டு) ஐயோ! என் பணிப் பெண்களில் ஒருத்தியாயினும் வரக் காணேனே என் செய் வேன்! இன்னமும் ஒடித்தான் தப்ப வேண்டும். (ஒடுகிறாள்.) வீர நீ எங்கு ஓடினாலும் உன்னை நான் விடப் போகிற தில்லை. . வஸ பெரிய மனிதர்களே! நான் சக்தி இல்லாத அபலை ஸ்திரீ என்னை ஏன் இப்படி உபத்திரவிக்கிறீர்கள்? வீர உன்னை நான் கொல்ல நினைக்கவில்லை. சுகமாய் என்னுடன் வாழலாம். ஏன் பயந்து ஒடுகிறாய்? தோழ ஒடுவது உன்னுடைய குற்றமல்லவா? உன்னை நாங்கள் ஒடச் சொன்னோமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/28&oldid=887534" இலிருந்து மீள்விக்கப்பட்டது