பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் - 29 வஸ் ஆஹா அப்படியா என்னுடைய மாலையைக் கழற்றி எறிந்து விடுகிறேன். சப்திக்கும் ஆபரணங்களையும் வாங்கிக் கையில் வைத்துக் கொள்கிறேன். அதுதான் மாளிகையின் கதவு: /கதவைக் கையால் தடவிப் பார்க்கிறாள்.) கதவு சாத்தப்பட் டிருக்கிறதே! என்ன செய்யப் போகிறேன் வேறு ஏதாவது வாச லில் இருக்கிறதோ பார்க்கிறேன். மாத (மாளிகைக்குள்/ஸோமேசா ஜெபம் செய்தாய் விட் டது. நானும் அவசியம் வரத்தான் வேண்டுமோ? நீ போகக் கூடாதா? ஸோமே : நான் உண்மையை முன்னமேயே தெரிவித்தேனே! மாத ஆஹா ஈசுவரா என்னுடைய நிலைமை இப்படியா ஆய்விட்டது மற்ற நண்பர்தாம் என்னை அலட்சியமாய் செய்து விட்டதாக நின்னத்தேன். நீயும் அப்படியே செய்கிறாய். இது உன்னுடைய குற்றமல்ல இது தரித்திர நிலைமையின் சுபாவம். தரித்திரனுடைய வார்த்தைக்கு மதிப்பேது? பூலோகத்தில் அவனை யார் மதிக்கப் போகிறார்கள்? 'இல்லானை இல்லாளும் வேண்டாள்" என்றால் பிறரைப் பற்றிச் சொல்லவும் வேண் டுமா இந்தப் பயனற்ற உடலைச் சுமந்து பூமிக்குப் பாரமாய் இருத்தலைவிட, உயிரை விட்டு விடுவதே உத்தமம். ஸோமே ; ஸ்வாமி! நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நான் இதோ போகிறேன். என்னுடன்கூட உங்களுடைய பணிப் பெண் கோமளாவை ஆயினும் அனுப்புங்கள். மாத கோமளா இவருடன் கூடப் போய்விட்டு வா. கோம : உத்தரவுப்படி செய்கிறேன். (ளேபரமேசன் கையில் ஒருதடியை எடுத்துக் கொள்கிறான். மாளிகையின் கதவைத் திறந்து வைத்து விட்டு இருவரும் வெளியில் போகிறார்கள்.) வஸ் : (தனக்குள் இதுவும் நல்ல அதிர்ஷ்டந்தான். இவர்கள் சமயத்தில் கதவைத் திறந்து வைத்தார்கள். மெதுவாய் நான் உள்ளே போகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/31&oldid=887542" இலிருந்து மீள்விக்கப்பட்டது