பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 31 கோம ஆகா இதென்ன அநியாயம் என்னை ஏன் பிடித்துக் கொண்டீர்கள்? விடுங்கள் விடுங்கள் ஒய், ஸோமேசரே? வாரும் வாரும்! தோழ இதென்ன ஆச்சரியம்! வேறு குரலாய் இருக்கிறதே! வீர பூனை வெண்ணெயைத் திருடப் போகும் சமயத்தில் பல விதமாகத் தன் குரலை மாற்றிக் கொள்வதைப் போல ஸ்திரீ களுக்கும் தம் குரலை மாற்றிக் கொள்ளும் வல்லமை உண்டு அல்லவா! (ஸோமேசன் கையில் தீபத்துடன் வருகிறான்./ ஸோமே ; (தனக்குள்) காற்றில் விளக்கு அணைந்து விடும் போல் இருக்கிறதே! இருளாய் இருக்கிறதென்று தீபத்தை எடுத்து வரப் போனேன். அதற்குள் கோமளா முன்னால் போய் விட்டாளே! (யாவரையும் பார்த்து விட்டு) யார் இவர்கள்? இங்கென்ன செய்கிறார்கள்? (உரக்க) கோமளா கோமளா வீர அடே யாரோ மனிதன் வந்து விட்டான் ஸோமே ஆஹா கோமளா இதென்ன இது? கோம ஸோமேசரே வாரும் வாரும் இவர்கள் என்னை உபத்திரவிக்கிறார்கள். ஸோமே : யாரையா நீங்கள்? இதென்ன அநியாயம்? மாதவ ராயர் ஏழ்மை நிலைமைக்கு வந்து விட்டதினாலேயே அவரை இவ்விதம் அவமானப்படுத்தலாமா? இதென்ன அக்கிரமம்? கோம ஸோமேசரே இதோ பாரும் என்னை இவர்கள் அவமானப்படுத்துகிறார்கள். ஸோமே ; இது உனக்கு மட்டுமல்ல; எங்களையும் அவ மானப்படுத்திய மாதிரி அல்லவா! இவர்களுக்கு எவ்வளவு துணிவு! நம்முடைய வீட்டு வாசலிலே இப்படி அக்கிரமமான காரியம் செய்யும் இவரைத் தக்கபடி தண்டிக்கா விட்டால் நமக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/33&oldid=887545" இலிருந்து மீள்விக்கப்பட்டது