பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் 33 வேண்டும். இது மனதாரச் செய்த குற்றமல்ல. நீர் எங்களை எவ் விதம் வேண்டுமானாலும் தண்டிக்கலாம். (தன் கத்தியை நீட்டி அவரை மண்டியிட்டு வணங்குகிறான்./ லோமே ! நீ மிகுந்த புத்திமான். எழுந்திரு. நான் முதலில் உன்னுடைய நற்குணத்தை அறிந்து கொள்ளாமல் துடுக்காய்ப் பேசி விட்டேன். போதும் எழுந்திரு. தோழ ஸ்வாமி! நான் கேட்பதற்கு சம்மதிப்பதானால் எழுந்திருக்கிறேன். லோமே : என்ன வேண்டும்? தெரிவி. தோழ வேறொன்றுமில்லை! நடந்தவைகளை மாதவராய ரிடம் தெரிவிக்காமல் இருத்தல் வேண்டும். ஸோமே சரி. அப்படியே ஆகட்டும். நான் அவரிடம் ஒன்றும் சொல்வதில்லை. தோழ பிராம்மணரே இந்த உபகாரத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். சகல விதமான உத்தம குணங்களையும் நீர் ஆயுதமாகத் தரித்திருக்க, உம்மை வெல்லக் கூடிய ஆயுதம் வேறு என்ன இருக்கிறது! வீர (கோமளாவை விட்டு விடுகிறான்) அடே நண்பா என்ன இது கைகளைக் கூப்பிக் கொண்டு கேவலம் தரித்திர னான இவன் காலில் விழுகிறாயே! தோழ எனக்கு மிகவும் பயமாய் இருக்கிறது. வீர எதற்காக? தோழ மாதவராயருடைய நற்குணங்களுக்காக. வீர உண்மைதான் வருபவருக்கு ஒரு வயிறு சோறு போடும் வல்லமை இல்லாதிருப்பது உத்தம குணந்தான் தோழ அப்படிச் சொல்வது தவறு. அவர் தன்னுடைய உதார குணத்தினாலேயே ஏழையானார். வழிப் போக்கர்களின் வ.கோ. 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/35&oldid=887549" இலிருந்து மீள்விக்கப்பட்டது