பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் இடத்திற்குப் போய்) வஸந்தஸேனா! உன்னை இன்னாள் என்று அறிந்து கொள்ளாமல், என்னுடைய பணிப்பெண் என்று நினைத்து ஏவினதை மன்னித்துக் கொள்ள வேண்டும். அரண் மனையைப் போன்ற உன்னுடைய மாளிகையை விட்டு நீ இவ்வளவு தூரம் இந்தக் குடிசையை நாடி வந்தது அபூர்வமாக இருக்கிறதே! . வஸ் : பிரபு நானல்லவோதங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். மேன்மைக்கு இருப்பிடமாகிய இவ்விடத்தில் ஒரு யோக்கியதையும் இல்லாதவளான நான் தங்கள் அனுமதியின்றி நுழைந்ததற்குத் தாங்கள் என்னை கூடிமிக்க வேண்டும். ஸோமே நீங்களிருவரும் ஒருவருக்கு ஒருவர் செய்து கொள்ளும் உபசாரம் நன்றாய் இருக்கிறது. நன்றாய் முற்றித் தலை வணங்கும் நெற்கதிரைப் போல இருவரும் குனிந்து நிற் கிறீர்கள். ஒட்டகத்தின் முழங்காலைப் போன்ற வளைக்க முடி யாத என் சிரத்தால் தாழ்ந்து நானும் வணங்குகிறேன். போதும் உபசாரம் நிமிர்ந்து நில்லுங்கள். மாத ஆம்! உண்மைதான். அதிக உபசாரம் எதற்கு? வஸ் : (தனக்குள்) ஆகா! விருத்தம்: ஆனந்த பைரவி எண்பெறு பிறவி கோடி யியற்றிய தவங்கள் கூடிக் கண்பெறு விருந்தே யென்ன அளித்தவோ குமர வேளைப் பெண்பெறு துறக்க மீதோ? பெறலரு குணத்தின் குன்றோ? புண்பெறு மனத்தி னாட்குப் புகலெனத் தோன்றி னாரோ! என்ன குணம் என்ன தோற்றம் கை நிறைந்த பணத்தைக் காட்டிலும் கண் நிறைந்த கணவனே மேல் என்று சொல்வது உண்மை என்று இப்பொழுதே தெரிகிறது! இவரைவிட்டு எப்படிப் பிரிந்து என் வீட்டிற்குப் போவேன் போனால் இத்தகைய சமயம் திரும்ப எப்பொழுது வாய்க்கும் என்னுடைய மாட மாளிகை, ஆபரணங்கள் முதலிய சகலமும் போவதாய் இருந்தாலும் நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/42&oldid=887565" இலிருந்து மீள்விக்கப்பட்டது