பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் - 41 கவலைப்பட மாட்டேன். இவருடன் சதா காலமும் இருக்கப் பெற்றால் அந்த ப்ரும்மானந்தம் ஒன்றே போதும். பிறவிக் குருடன் திடீரெனக் கண்ணை பெற்று உலகத்தில் உள்ள வினோதக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, திரும் பவும் பார்வையை இழக்க நேர்ந்ததைப் போலானதே என் கதி! இருக்கட்டும் ஒரு தந்திரம் செய்கிறேன். (உரக்க ஸ்வாமி! நான் உங்களுடைய கருணா கடாட்சத்தைப் பெற்றது உண்மை யானால் என்னுடைய ஆபரணங்களை இப்பொழுது இவ்விடத் திலேயே வைத்து விட்டுப் போக அனுமதி தர வேண்டும். இவற்றை அபகரிக்கும் பொருட்டே இத்துவிடர்கள் என்னைத் தொடர்ந்து துரத்திக் கொண்டு வந்தார்கள். மாத ஸ்திரீ ரத்னமே! அவ்விதமான நம்பிக்கையை வைப்ப தற்கு இந்த வீடு அருகமானது அல்லவே! என்ன செய்கிறது! வஸ பிரபு நாம் நம்புவது மனிதரையே அன்றி வீட்டை அல்லவே! ஆகையால் நீங்கள் இவ்விதம் சொல்லக் கூடாது. தயவு செய்ய வேண்டும். - மாத ஸோமேசா! அப்படியானால் இந்த ஆபரண மூட் டையை வாங்கிக் கொள். வஸ் : இந்த உபகாரம் செய்தீர்களே இதுவே போதும். உங்களுக்கு ஸ்வாமி ஒரு குறைவையும் வைக்க மாட்டார். ஸோமே : வங்கிக் கொண்டு) ஸ்திரீயே இந்த உபகாரத்தை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். இனி எங்களுக்கு என்ன குறைவு இருக்கிறது? - மாத ஸோமேசா! உனக்கே கொடுத்து விட்டதாக நினைக் கிறாயோ! நீ மிகவும் சமர்த்தன்தான்! இன்றிரவு முழுதும் இவற்றைப் பாதுகாத்துத் திரும்பவும் சொந்தக்காரரிடத்தில் ஒப்புவித்தல் வேண்டும். - ஸோமே (இரகசியமாக நம்மிடத்தில் இருப்பது நம் முடைய பொருள்தானே? மாத போதும் விளையாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/43&oldid=887566" இலிருந்து மீள்விக்கப்பட்டது