பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் வஸ (வணக்கமாக எனக்கு இன்னொரு உதவி செய்தல் வேண்டும். உங்களுடைய நண்பராகிய இவரை என்னுடன் கூடத் துணையாக என் விடுவரையில் தயவு செய்து அனுப்ப வேண்டும். மாத அதுதானா பிரமாதம் ஸோமேசா கூடப் போய் விட்டு வா. ஸோமே ; இதற்குத் தகுந்தவர்கள் நீங்களே அன்னப் பேடையோடு துணை செல்வதற்குக் காக்கைக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? நான் ஏழைப் பிராமணன். எலும்புத் துண்டை நாய் கெளவுவதைப் போல என்னை இந்தக் காமா தூரர் பிடித்துப் பொடியாக்கி விடுவார்கள். மாத சரி, நானே போகிறேன். வேலைக்காரனைக் கூப் பிட்டுப் பந்தம் தயார் செய்யச் சொல்லு. ஸோமே ; அடே குணசீலா! குண ஸ்வாமி! ஸோமே : சீக்கிரம் பந்தம் கொளுத்து. குண எண்ணெய் இல்லாமல் பந்தம் எரியுமானால், கொளுத்தத் தடை இல்லை. ஸோமே (மாதவராயரிடத்தில் தனிமையில்) நம்முடைய வீட்டுப் பந்தம் வேசியின் குணத்தை உடையது. அது ஏழைகள் வீட்டில் பிரகாசிப்பது இல்லை. தனவந்தரைத்தான் அது மதிக்குமே யன்றி நம்மை மதிக்காது. மாத சரி! அப்படியானால் அதையும் நாம் மதிக்க வேண் டாம். மிகவும் பிரகாசத்தோடு ஆகாயத்தில் அதோ சந்திரன் இருக்க, நமக்கு என்ன கவலை? அவன் ஏழையையும் தனவந் தனையும் சமமாக மதிப்பதனாலே அவனுக்கு மதி என்று பெயர் வந்திருக்கிறது. வாருங்கள் போவோம். (மூவரும் நடந்து வெளியில் போகிறார்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/44&oldid=887568" இலிருந்து மீள்விக்கப்பட்டது