பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 45 திண் (மகிபாலனை அசைத்த வண்ணம்) இல்லேடா இது கல்லு மாதிரி இக்குதுறா ரவையுண்டு கிள்ளிப் பாக்கிறேண்டா. (கிள்ளுகிறான்.) திண் : எல்லாக் கோயில்லெயும் சாமி கல்லுலேயும் மண் லேயுங் கட்டேலெயுந் தாண்டா இக்குது அடிச்சா அளத் தெரி யாதுறா. இந்தச் சாமி உயிருள்ள சாமி மாதிரி புச்சா இருக்கு 5|Lss! - முண் ஆமுண்டா இந்தச் சாமிக்கு புதுமாதிரிச் பூசெ, நிமித்தியம் எல்லா பண்ணணும்டா. இந்தச் சாமிக்கு அடிச்சா அளத் தெரியுமான்னு பாக்கறேண்டா. (முதுகில் ஓங்கி அடிக்கிறான்./ திண் சாமி அளுவல்லெடா! நல்ல சாமிடா பொறுமைப் பொறுத்தவருடா: பூலோவம் ஆண்டவருடா தப்புதம்! தப்புதம்! சாமி ஒன்னே அடிச்சேன்னு கோவிச்சுக்காதே. கன்னத் திலே போட்டுக்றேன். (மகிபாலனுடைய இரு கன்னங்களிலும் அடிக்கிறான்./ முண் : அதெல்லாம் இக்கட்டும். நாம்ப ரெண்டு பேரும் இந்த உயிருச்சாமிக்கு மின்னாலே சூதாடலாம் வா! சாமி எங்கப்பன் நம்ப தகராரைத் தீப்பாரு. திண் சரி ஒக்காரு; ஒனக்காச்சு எனக்காச்சு ஒரு கை பார்க்க லாம்; சாமிகூட கொஞ்சூண்டு கண்ணைத் தொறந்து அதோ என்னெப் பாக்குதுடா முண் சாமி என்னெப் பாக்க மாட்டேங்குதே! இந்தச் சாமிக்குச் சூதாட்டத்துலே நொம்ப பிரியண்டா நொம்ப பத்தி யோடே சூதாட்ற சீசாக்களைக் கண்ணாலே பாத்து முத்தி கொடுக் கும்டா பேசற சாமிடா இது! (இருவரும் எதிரில் உட்கார்ந்து கொண்டு சூதாடுகிறார்கள். அதைப் பார்த்திருந்த மகிபாலனுக்கு ஆட்டத்தில் ஒருவித இன்பம் ஏற்படுகிறது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/47&oldid=887576" இலிருந்து மீள்விக்கப்பட்டது