பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் மகி (தனக்குள்) நாட்டை இழந்த அரசனுக்குப் பேரிகை வாத்தியத்தின் முழக்கம் எவ்வளவு மனோ வேதனையை உண் டாக்குமோ, அவ்விதமே பாய்ச்சிக் கைக் காய்களின் ஒசை பண மில்லாத தரித்திரனாகிய என்னை மிகவும் வருத்துகிறதே! கோகிலத்தின் சங்கீதம் காதில் படுவது எவ்வளவு இன்பமாக இருக்குமோ அப்படி இருக்கிறதே இந்தக் காய்களின் ஒலி இனி சூதாடக் கூடாதென்று எவ்வளவு உறுதி செய்து கொண்டாலும் பிறர் ஆடுவதைப் பார்த்தால் என் மனோ திடமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஒடிப் போகிறதெ! திண்: இந்தா இருக்காப் பன்னெண்டு பாத்துக்க கெலிப்பு என்னோடே. முண் போவட்டும் இந்தாலே பாரு பகடெ பன்னண்டு. சாமி பகடெ பன்னண்டு விளனும்! நீ எம்பக் கத்திலெ இரு; நீ கண்ணு இக்கா தெய்வமானாப் பார்த்துக்க இந்தா பகடெ பன்னண்டு உளுந்திச்சு போடு துட்டே! மகி (தன்னை மறந்து பீடத்தில் இருந்து கீழே குதித்து/ இல்லை இல்லை நன்றாய்ப் பார் இது இருக்கா லெட்டர் அல்லவா. . திண் : அம்புட்டுக் கிட்டாண்டா ஆளு! முண்: /மகிபாலனைப் பிடித்துக் கொண்டு/அடே ரோக்கியா மாட்டிக்கினியா? போடு பண்த்தெ! என்னெ ஆருன்னு பார்த்துக் கிட்டெ? சொம்மா ஏமாத்திப் புடலாமுன்னு பார்த்தியா? கழட் டுறா ரூவாயெ; ஒங்க பாட்டன் வூட்டுப் பணமோ ஒட்றியா? செவிட்டுலே குடுக்கறேன் பாரு. (அடிக்கிறான்.) திண் : முளிக்கிறாண்டா ஆடு திருடின கொறவன் மாதிரி தோண்டுறா முளியே. (அடிக்கிறான்.) மகி (நயந்து அப்பா என்னை அடிக்க வேண்டாம். இன்றைக்குள் எப்படியாவது பணத்தைக் கொடுத்து விட்டு மறு வேலை பார்க்கிறேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/48&oldid=887578" இலிருந்து மீள்விக்கப்பட்டது