பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் 49 முண் சவாசப்பா அடே! என்னெ யாருன்னு பாத்துக் கிட்டே, ஒன் சூச்சமெல்லாம் எங்கிட்டச் செல்லாது. எனக்குக் காதா குத்ரே? என் காதைப் பாத்தியா எம்பிட்டுப் பெரிய தொளே மின்னயே சூத்தியாச்சுடா பூராப் பணத்தியும் கீளே வச்சுப்பிட்டு அந்தாண்டே போ. அதுக்கு மின்னே அப்பாலே இப்பாலே நகந்தின்னா முட்டியைப் பேத்துப்புடுவேன் சாக்கிறதே. மகி நான் இங்கே பணம் யாரிடத்தில் வாங்கிக் கொடுப் பேன்? முண் ஆருக்கிட்ட வாங்கினா எனக்கென்னடா? வெக்கங் கெட்ட நாயே! ஒங்கப்பனை வித்துக் குட்றா! மகி என் தகப்பன் இறந்து போய் விட்டானே! எமனுக்குத் தான் சீட்டு எழுத வேண்டும். முண் இல்லாமே போனா ஒங்கம்மாளை வித்துக் குட்றா. மகி அவள் என் தகப்பனைத் தேடிக் கொண்டு போய் 3 வருடமாய் விட்டதே! அவளை நான் எங்கே காணப் போகி றேன்? அவள் இருக்கிற இடத்தைக் காட்டினால் அவளை விற்றுத் தருகிறேன். திண் போடு பல்லு மேலே; பேசராண்டா வெறும் பேச்சு! இன்னும் செத்தே நேரத்துலே பணம் வராமெப் போனா நீ ஒங்கம்மா இக்கற வெடத்துக்கு போயிருவே. ஆச்சேபனை இல்லை. பேசாமே ரொக்கத்தெக் கீளே வச்சீன்னாப் பொளெச்சே, முண். இல்லாமெப் போனா ஒன்னையே வித்துக் குட்றா. மகி சரி! அப்படியே ஆகட்டும். என்னை இராஜ வீதிக்கு அழைத்துக் கொண்டு போங்கள். முண் போகலாம் வா (போகிறார்கள்) திண் (உரக்க பத்து ரூவாய்க்கி இந்த மனிசனை விக்கி றோம்; வாங்கறவங்க வாங்கலாம். (பலதரம் கூவுகிறான்./ வ.கோ.-ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/51&oldid=887586" இலிருந்து மீள்விக்கப்பட்டது